சேலம் சூரமங்கலம் திருஇருதய ஆண்டவர் ஆலய திருவிழா கடந்த 18-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து தினமும் மாலை திருப்பலி நடந்தது. நேற்று காலை திருப்பலி மற்றும் உறுதி பூசுதல் விழா சேலம் மறை மாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமையில் நடந்தது.
மாலையில் வேண்டுதல் திருப்பலி பங்குதந்தை இருதய செல்வம் தலைமையில் நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடந்தது. மலர்கள், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் திருஇருதய ஆண்டவர் சொரூபம் பவனியாக கொண்டு செல்லப்பட்டது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.