குரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.27 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார். ஆடி 18 ஆம் நாள், ஆடி அமாவாசை அன்று குருப்பெயர்ச்சி நடக்கிறது. முப்பெரும் சிறப்பு பெறும் நாளாக ஆகஸ்ட் 2 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அமைகிறது. அதுவும் முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமை நாளில் அமைவதால் கூடுதல் நன்மை.
வசிஷ்டேஸ்வரரைக் வணங்கி நவகிரகங்களில் வியாழனாக அந்தஸ்தினைப் பெற்றார். அதனால் வியாழன் கிரகம் ராஜகிரகம் என்று அழைக்கப்படுகிறது. இவர் இடம் பெயர்வதே குரு பெயர்ச்சி என்று வழங்கப்படுகிறது.
குருவின் அதிக கதிர்வீச்சு பெறுவது மஞ்சள். அதை நாம் புனிதமான கிழங்காக பார்க்கிறோம். பெண்களுக்கு குருவின் சக்தி கிடைக்க வேண்டும் நல்ல தெளிந்த அறிவை பெற வெண்டும் என மஞ்சளை அதிகம் உபயோகிக்கிறோம். குரு அருள் கிடைக்கும், இஷ்டதெய்வ அருளாசி கிடைக்க மஞ்சள் நிறத்தை அதிகம் உபயோகிக்கிறோம்.
குரு மனிதர்களுக்கு தரும் முக்கியமான குணம் அன்பு, அமைதி, இரக்கக்குணம், மனிதாபிமானம், நல் சிந்தனை, நுணுக்கமான பார்வை, நல்ல குழந்தைகள், சமூகத்தில் அந்தஸ்து ஆகியவை ஆகும். நம்ம ராசிக்கு குரு இருந்தால் அப்போதெல்லாம் நமக்கு மேற்கண்ட பலன்கள் கிடைக்கும் என்றும் நம்பலாம்.
பிறப்பு ஜாதகத்தில் குரு கெட்டிருந்தாலும் கோட்சாரத்தில் குரு ராசிக்கு நல்ல நிலையில் வரும்போது நிச்சயம் நல்ல பலனை தருவார் அதனால்தான் எல்லோரும் ஆர்வமாக குருப்பெயர்ச்சி பலன்களை எதிர்பார்க்கின்றனர்.