ஆன்மிகம்

வீணையுடன் காட்சி தரும் கடவுள்கள்

வீணையில் 32 வகையான வீணைகள் இருக்கின்றன என்றும், இதில் 31 வகையான வீணையினைக் கடவுளாக இருப்பவர்கள் இசைப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன.

1. பிரம்மதேவனின் வீணை - அண்டம்

2. விஷ்ணு - பிண்டகம்

3. ருத்திரர் - சராசுரம்

4. கவுரி - ருத்ரிகை

5. காளி - காந்தாரி

6. லட்சுமி - சாரங்கி

7. சரஸ்வதி - கச்சபி எனும் களாவதி

8. இந்திரன் - சித்தரம்

9. குபேரன் - அதிசித்திரம்

10. வருணன் - கின்னரி

11. வாயு - திக்குச்சிகை யாழ்

12. அக்னி - கோழாவளி

13. நமன் - அஸ்த கூர்மம்

14. நிருதி - வராளி யாழ்

15. ஆதிசேடன் - விபஞ்சகம்

16. சந்திரன் - சரவீணை

17. சூரியன் - நாவீதம்

18. வியாழன் - வல்லகி யாழ்

19. சுக்ரன் - வாதினி

20. நாரதர் - மகதி யாழ்

21. தும்புரு - களாவதி (மகதி)

22. விசுவாவசு - பிரகரதி

23. புதன் - வித்யாவதி

24. ரம்பை - ஏக வீணை

25. திலோத்தமை - நாராயணி

26. மேனகை - வாணி

27. ஊர்வசி - லகுவாட்சி

28. ஜயந்தன் - சதுசும்

29. ஆஹா, ஊஹூ தேவர்கள் - நிர்மதி

30. சித்திரசேனன் - தர்மவதி (கச்சளா)

31. அனுமன் - அனுமதம்