விலைவாசி உயர்வு காரணமாக தங்க ரதம் இழுப்பதற்கான கட்டணம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டு நேற்று முன்தினம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி மலைக்கோவிலில் தினந்தோறும் இரவு 7 மணிக்கு தங்க ரதம் புறப்பாடு நடைபெற்று வருகிறது. தங்க ரதம் இழுத்து வழிபட விரும்பும் பக்தர்களிடம் இதுவரை ரூ.2 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் இந்த கட்டணம் மாற்றப்படாமல் இருந்து வந்தது.
தங்க ரதம் இழுத்து வழிபடும் பக்தர்களுக்கு பரிவட்டம், முருகன் படம், எவர்சில்வர் குடம் உள்ளிட்ட 18 வகையான பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விலைவாசி உயர்வு காரணமாக தங்க ரதம் இழுப்பதற்கான கட்டணம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டு நேற்று முன்தினம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதேபோல், லட்டு, அதிரசம், முறுக்கு, தேன் தினைமாவு, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை உள்ளிட்ட 6 வகையான பிரசாதங்கள் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக பிரசாதங்களின் விலை மாற்றியமைக்கப்பட்டது.
இந்த புதிய விலை உயர்வும் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது.