தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவில் 
ஆன்மிகம்

தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவில் தேரோட்டம் ரத்து

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதால் தர்மஸ்தலாவில் பிரசித்திபெற்ற மஞ்சுநாதா சுவாமி கோவிலில் இந்த ஆண்டு திருவிழா மற்றும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

தட்சிண கன்னடா மாவட்டம் தர்மஸ்தலாவில் பிரசித்திபெற்ற மஞ்சுநாதா சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் ஆண்டு திருவிழா மற்றும் தேரோட்டம் நடைபெறும். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதால் இந்த ஆண்டு திருவிழா மற்றும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தர்ம தேவதைகள், அண்ணப்பா சுவாமிக்கு நடைபெறும் சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள், 5 நாட்கள் நடைபெறும் மஞ்சுநாதா சுவாமியின் தேரோட்டம் உள்பட கோவிலில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே ஊரடங்கையொட்டி கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதுவும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. மாநில அரசிடம் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர அனுமதி இல்லை என்று கோவில் தர்மாதிகாரி வீரேந்திர ஹெக்டே தெரிவித்துள்ளார்.