ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 6 மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம்

தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்ததால் விரைவில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆந்திராவில் புயல் சின்னம் உருவானதால் திருப்பதி கோவிலில் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது. 6 மணி நேரத்தில் தரிசனம் முடிந்தது. 65,218 பேர் தரிசனம் செய்தனர், 20,213 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.69 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

ஆந்திர மாநிலத்தில் புயல் சின்னம் உருவானதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்களது தரிசனத்தை ஒத்திவைத்து உள்ளனர்.

6 மணி நேரத்தில் தரிசனம்

தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்ததால் விரைவில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதியில் நேற்று 65,218 பேர் தரிசனம் செய்தனர். 20,213 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.69 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

3.94 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT