ஆன்மிகம்

திருப்பதியில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

நேற்று காலை முதல் அதிக அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி விடுமுறை நாட்களில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் பிற்பகலில் இருந்து தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது. இதனால் சனிக்கிழமை 90,011 பேர் தரிசனம் செய்தனர். ரூ.3.76 உண்டியல் காணிக்கை வசூலானது.

நேற்று காலை முதல் அதிக அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் பக்தர்களின் எண்ணிக்கையை விரைந்து கண்டறிந்து தரிசனத்திற்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று 91,020 பேர் தரிசனம் செய்தனர். 35, 193 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.54 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசனத்தில் வந்த பக்தர்கள் 5 மணி நேரம், தரிசன டிக்கெட் இல்லாமல் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.