திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை சின்ன சேஷ வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளிய காட்சி. 
ஆன்மிகம்

திருப்பதியில் 4 மணி நேரத்தில் தரிசனம்- பக்தர்கள் மகிழ்ச்சி

திருப்பதியில் நேற்று 61,361 பேர் தரிசனம் செய்தனர். 18,722 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர்.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். 4 மணி நேரத்தில் தரிசனம் செய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சேஷ வாகனம்

இதையடுத்து ஸ்ரீதேவி பூதேவி சகோதரா ஏழுமலையான் பெரிய சேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இன்று காலை சின்ன சேஷ வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்தார். அப்போது மாட வீதி முழுவதும் நிரம்பி இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என விண்ணதிர பக்தி பரவசத்தில் முழக்கமிட்டனர்.

4 மணி நேரம்

பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வி.ஐ.பி பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது.

இதனால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். 4 மணி நேரத்தில் தரிசனம் செய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருப்பதியில் நேற்று 61,361 பேர் தரிசனம் செய்தனர். 18,722 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.4.70 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 3.20 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது.

SCROLL FOR NEXT