ஆன்மிகம்

தேவி கருமாரியம்மன் கோவிலில் ஆடிவெள்ளி திருவிழா நாளை நடக்கிறது

வேலூர் டிட்டர்லைனில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

மாலை மலர்

வேலூர் டிட்டர்லைனில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில் 37-வது ஆண்டு ஆடி வெள்ளி திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அதையொட்டி அன்று காலை 6 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடக்கிறது. பகல் 12-30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

இரவு 7.30 மணிக்கு சக்தி அம்மா ஆசியுடன், ராணிப்பேட்டை ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் வீனஸ் என்.பத்மநாபன், வி.ஆர்.வெங்கடேச செட்டியார், கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி தலைவர் டி.எம்.கதிர்ஆனந்த், பி.எஸ்.இளங்கோ அண்டு பிரதர்ஸ், எஸ்.பாலாஜி ஆகியோர் முன்னிலையில், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்தசுவாமிகள் ஆகியோர் தேவி கருமாரியம்மன் புஷ்ப பல்லக்கு, வாணவேடிக்கை, நடமாடும் இசை கச்சேரி, சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், நையாண்டி மேளம், கேரள பஞ்ச வாத்திய நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கின்றனர்.

12-ந்தேதி (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி., தி.அ.முகமதுசகி ஆகியோர் தலைமையில் லஷ்மன் ஸ்ருதி இசை குழுவுடன் இணைந்து திரைப்பட பின்னணி பாடகர் மதிச்சியம் பாலு பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.