திருப்பலி நடைபெற்றதையும், திரளானவர்கள் பங்கேற்றதையும் படத்தில் காணலாம். 
ஆன்மிகம்

முட்டம் சகல புனிதர்கள் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி

முட்டம் சகல புனிதர்கள் ஆலய சிறப்பு திருப்பலியில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் பங்கேற்றார்.

மாலை மலர்

முட்டத்தில் சகல புனிதர்கள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் பங்கு திருவிழா தொடங்கியது. அதன் பிறகு விழா நாட்களில் தினமும் திருப்பலி, செபமாலை, கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

9-ம் திருவிழாவன்று நடந்த திருப்பலிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கினார். 10-ம் நாள் திருவிழாவன்று காலை 6.30 மணிக்கு செபமாலை, 7 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது. திருப்பலிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்கி மறையுரையாற்றினார். இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை பங்குதந்தை அமல்ராஜ், இணை பங்குதந்தைகள் ஜோஸ் ஜெ.பெஸ்க், சகாய ஜெரோம் மற்றும் பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவை, அருட் சகோதரிகள், அருட் சகோதரர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.