கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த பரங்கிப்பேட்டையில் பாபாஜி கோவில் உள்ளது. பரங்கிப்பேட்டையில் கி.பி.203-ம் ஆண்டு கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் சுவேதாநாத அய்யருக்கும், ஞானாம்பிகை அம்மையாருக்கும் மகனாக பாபாஜி பிறந்தார்.
இவர் அவதரித்த நாள் கார்த்திகை தீப திருநாள் ஆகும். இவர் 11-வது வயதில் இறை அனுபவம் பெற ஞானியர்களுடன் இணைந்து கதிர்காமத்திற்கு புனிதபயணம் மேற்கொண்டார். அங்கு போகரை சந்தித்து யோக சாதனைகளை பயின்றார். அவரிடம் தீட்சையும் பெற்றார். பின்னர் இவர் போகரின் குருவான அகத்தியரை காண திருக்குற்றால மலையை அடைந்தார்.
அகத்தியரை நினைத்து 48 நாட்கள் கடும் தவம் இருந்தார். இவரின் அளவற்ற அன்பினை பார்த்த அகத்தியர். பாபாஜிக்கு கிரியா குண்டலினி பிராணாயாமத்தை உபதேசித்து அருளினார். இமயமலையில் உள்ள பத்ரீநாத் சென்று தவம் செய்து ஒளிஉடம்பினை(மரணம் இல்லா பெறுவாழ்வு) பெறுவாய் என்று பாபாஜிக்கு அகத்தியர் அருளினார். அவரது ஆணைப்படி பாபாஜி இமயமலையின் மேல் உச்சியில் தவசாலை அமைத்தார். இன்றும் அவர் ஒளிவடிவாய் அங்கு வாழ்ந்து வருகிறார். பாபாஜியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வணங்கி வருகிறார். பாபாஜி பிறந்த பரங்கிப்பேட்டை மண்ணில் இவருக்கு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.
கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரம் அன்று அவருடைய பிறந்த நாள் ஆகும். இந்த ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி அந்த தினம் வருகிறது. அன்றையநாளில் அவருக்கு ஹோமம் வளர்த்து சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. அன்று காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 3 மணி வரை கோவில் திறந்திருக்கும்.
பரங்கிப்பேட்டை பாபாஜி கோவிலை தொடர்பு கொண்டு பேசுவதற்கு தொலைபேசி எண்: 9688399441.