ஐயப்பன் 
ஆன்மிகம்

சாமியே சரணம் ஐயப்பா..

‘ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா’ என்றால், நம் பாவங்களை அழித்து ஞானத்தைப் பெற ஐயப்பனை சரண் அடைகிறோம் என்று பொருள்.

சபரிமலை ஐயப்பன் கோவில், ‘சுயம்பு லிங்க பூமி’, ‘யாக பூமி’, ‘பலி பூமி’, ‘யோக பூமி’, ‘தபோ பூமி’, ‘தேவ பூமி’, ‘சங்கமம் பூமி’ என்ற 7 சிறப்புகளைக் கொண்டது.

‘ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா’ என்றால், நம் பாவங்களை அழித்து ஞானத்தைப் பெற ஐயப்பனை சரண் அடைகிறோம் என்று பொருள்.

சபரிமலைக்கு முதன் முதலில் மாலை அணிந்து செல்பவர்கள், 48 மைல் கொண்ட பெரிய பாதையில் செல்ல வேண்டும் என்பது மரபு.

நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று அகந்தைகளையும் விரட்டவே, சபரிமலை பதினெட்டாம் படியில் மூன்று கண்களை உடைய தேங்காயை உடைக்கிறார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ``தத்துவமசி’’ எனும் வார்த்தை எழுதப்பட்டுள்ளது. தத்துவமசி என்றால், ``நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாக உள்ளாய்’’ என்று பொருள்.

சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர சங்கராந்தி அன்று தோன்றும் ஜோதியை அப்பாச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்தும் காணலாம். புல்மேடு பகுதியில்தான் இந்த ஜோதி நன்றாக தெரியும்.

சபரிமலை ஐயப்பனின் உற்சவர் சிலை, ஆண்டுக்கு ஒரு முறை பம்பை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு ஆராட்டு உற்சவம் நடைபெறும். பிறகு ஐயப்பனை அலங்கரித்து பம்பா விநாயகர் கோவில் முன்பு மக்கள் தரிசனத்துக்காக 3 மணி நேரம் வைப்பார்கள். சபரிமலை வர இயலாத 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த சமயத்தில் ஐயப்பனை தரிசிக்கலாம்.

பொ.பாலாஜி கணேஷ்