ஆன்மிகம்

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட சாமி கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட சாமி கோவில் கோபுர ஆண்டு விழாவை முன்னிட்டு 500 பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

மாலை மலர்

மணலி புதுநகர் வைகுண்டபுரத்தில் உள்ள அய்யா வைகுண்டசாமி தர்மபதி கோவில் கோபுர ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி காலை பணிவிடை உகப்படிப்பும், மதியம் 12 மணியளவில் நடை திறக்கப்பட்டு உச்சிபடிப்பும் நடைபெற்றது.

விழாவில் 500 பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அய்யாவை வழிபட்டனர். இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அன்னதானத்தை வடசென்னை மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் வர்த்தகர் அணி தலைவர் சக்திவேல் தொடங்கி வைத்தார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.