கன்னியாகுமரி அருகே உள்ள முட்டபதி ஐயா வைகுண்டசாமி கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் பணிவிடை, உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, ஐயாவின் வாகன பவனி, அன்னதானம் போன்றவை நடந்து வந்தது.
நேற்று இரவு 8 மணிக்கு கலிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதற்காக ஐயா எலுமிச்சம்பழம் மற்றும் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். பிறகு கோவிலில் இருந்து புறப்பட்டு ஒற்றையால்விளை, மாதவபுரம் ஆகிய ஊர்களை சுற்றி ஐயா வலம் வந்தார். வழி நெடுகிலும் ஐயாவழி பக்தர்கள் திரண்டு சுருள் படைத்து வரவேற்றனர். பிறகு வாகன பவனி முட்டபதி வடக்கு வாசலை சென்றடைந்தது. நள்ளிரவு 12 மணிக்கு ஐயா கடலில் வேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை முட்டபதி ஐயா வைகுண்டசாமி பதி தர்மகர்த்தாக்கள் செய்திருந்தனர்.