ஆவுடையார் கோவிலில் அடைத்த நிலையில் இருக்கும் அம்பாள் சன்னதி 
ஆன்மிகம்

ஆவுடையார் கோவிலில் அடைத்த நிலையில் இருக்கும் அம்பாள் சன்னதி

ஆவுடையார் கோவிலில் அம்பாளுக்கும் விக்ரகம் இல்லை. அம்பாள் சன்னதி எப்போதும் அடைத்தே இருக்கும். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

மாலை மலர்

ஆவுடையார் கோவிலில் உள்ள தேர் தமிழகத்திலுள்ள பெரிய தேர்களுள் ஒன்றாகும். தட்சனின் யாகத்திற்கு சிவனை மீறிச் சென்றதற்கு மன்னிப்பு பெறுவதற்காக, அம்பாள் இத்தலத்தில் அரூப வடிவில் தவம் செய்தாள்.

எனவே, இங்கு அம்பாளுக்கும் விக்ரகம் இல்லை. அவள் தவம் செய்தபோது, பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடக்கிறது. இந்த பாதத்தை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, கண்ணாடியில் பாதம் பிரதிபலிக்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவளது சன்னதி எப்போதும் அடைத்தே இருக்கும் என்பதால், சன்னதி முன்புள்ள ஜன்னல் துவாரம் வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும். தங்கள் வேண்டுகோள் நிறைவேற அம்பாளை தரிசிக்கும் பக்தர்கள் வெளியிலிருந்தே தரிசிக்கிறார்கள்.