செங்கழுநீரம்மன் கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம். 
ஆன்மிகம்

செங்கழுநீரம்மன் கோவில் தேர் திருவிழா தொடங்கியது

வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

மாலை மலர்

புதுவை வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அதிகாலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, காலை 5 மணியளவில் கோவில் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மாடவீதியில் அம்மன் வீதிஉலா நடந்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை தேரோட்டம் நடக்கிறது. இதில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கலந்துகொண்டு தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். மறுநாள் (17-ந் தேதி) தெப்ப உற்சவம், 23-ந் தேதி முத்துப்பல்லக்கு வீதிஉலா நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி தாசில்தாரும், கோவில் தனி அதிகாரியுமான ராஜேஷ் கண்ணா, தேர் கமிட்டியினர், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.