திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குரு பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருப்பெயர்ச்சி விழா அதி விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு நாளை(சனிக் கிழமை) காலை 9:31 மணிக்கு பிரவேசம் செய்கிறார்.
இதையொட்டி இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி அளவில் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து முதல்கால யாகசாலைபூஜை
நாளை(சனிக்கிழமை) மூலவர் மற்றும் உற்சவர் குருபகவானுக்கு தங்க கவச அலங்காரம் மற்றும் விநாயகர், சாமி, அம்மன், சனிபகவான், முருகன் சன்னதிகளில் சந்தனகாப்பு அலங்காரம் நடை பெறுகிறது.
காலை 9:31 மணிக்கு குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பிரவேசம் செய்கிறார். அப்போது குருபகவானுக்கு மகாதீபாராதனை காட்டப்படுகிறது.
விழாவில் தமிழகம் மட்டுமின்றி பிறமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆலங்குடிக்கு சிறப்பு பஸ்களை விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குருபெயர்ச்சியை முன்னிட்டு குருபகவானுக்கு முதல்கட்ட லட்சார்ச்சனை கடந்த 23-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.
2-வது கட்ட லட்சார்ச்சனை வருகிற 7-ந்தேதி தொடங்கி 14-ந்தேதி வரை நடைபெறுகிறது.
தஞ்சையை அடுத்த திட்டையிலும் குருபகவானுக்கு தனி சன்னதியுடன் கோவில் உள்ளது.
இங்கும் நாளை குருப் பெயர்ச்சி விழா நாளை நடைபெறுகிறது.