கும்பகோணம் காமராஜர் சாலையில் உள்ள தூய அலங்கார அன்னை பேராலய ஆண்டு திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முதன்மை குரு அமிர்தசாமி கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து திருப்பலியும், மறையுரையும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேர்பவனி நேற்று நடைபெற்றது. இதையொட்டி கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலியும், மறையுரையும் நடைபெற்றது. பின்னர் இரவு அலங்கார அன்னை அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டது.
கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் பிரார்த்தனை செய்து தேர்பவனியை தொடங்கி வைத்தார். இந்த தேர்பவனி ஆலயத்தை சுற்றி வந்தது. இதில் அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.