ஆன்மிகம்

செல்வ வளம் தரும் அட்சய திருதியை வழிபாடு

கலசத்தில் அரிசி, தங்கம், வெள்ளிப் பொருட்கள் வைத்து, குபேர மந்திரங்களை சொல்லியும் வழிபடலாம்.

அட்சய திருதியை நாளன்று, அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்து வாசலில் கோலமிட வேண்டும். பின்பு, பூஜையறையில் மகாலட்சுமி படம் வைத்து, மலர்களால் அலங்காரம் செய்து விளக்கேற்றி வழிபட வேண்டும். கலசத்தில் அரிசி, தங்கம், வெள்ளிப் பொருட்கள் வைத்து, குபேர மந்திரங்களை சொல்லியும் வழிபடலாம்.

அட்சய திருதியை நாளில் செய்யும் வழிபாடுகளுக்கு அதிக பலன் உண்டு. கங்கை போன்ற புனித நதிகளில் நீராடுவது, வேதங்கள் படிப்பது, ஹோமங்கள் நடத்துவது விசேஷம். அன்றைய தினம் பெரும்பாலானோர் தங்கம் வாங்க வேண்டும் என்பதில் மட்டுமே கவனமாக இருக்கிறார்கள். ஆனால் அதை விட அன்றைய தினம் செய்யப்படும் தான, தர்மங்களுக்கே அதிக பலன் உண்டு.

இந்த நாளில் அன்னதானம் அளிப்பது, ஏழைகளுக்கு முடிந்த அளவு உதவிகளை செய்வது சிறந்த பலன் தரும்.

திருமணம், கிரகப் பிரவேசம் போன்ற சுபகாரியங்களை செய்யலாம். லட்சுமி நாராயணரை வழிபட்டால் செல்வ வளம் பெருகும். லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்.