ஆன்மிக களஞ்சியம்

வெளிப்பட்டது தேவரகசியம்

அதுகேட்ட அகத்தியர் புன்முறுவல் செய்து, அது தேவ ரகசியம் என்றார்.எருக்கின் சாரத்தில் ஒரு அணுப்பிரமானத்தைத் தனியாகப் பிரித்தெடுக்க இதுவே மருத்துவ வழி.

அப்போது நவக்கிரகர்கள் அகத்தியரை நோக்கி, 'முனிபுங்கவரே! நாங்கள் தவமிருப்பதும், தீர்த்த நீராடுவதும் தவிர, எங்களை எருக்க இலைகளில் தயிரன்னத்தைப் புசிக்க சொன்னது என்ன காரணம்?' என்று கேட்டார்கள்.

அதுகேட்ட அகத்தியர் புன்முறுவல் செய்து, "அது தேவ ரகசியம். இருந்தாலும் நீங்கள் விரும்பிக் கேட்பதால் சொல்கிறோம்.

எருக்க இலையில் தயிரன்னத்தை வைத்தால் எருக்கிலையின் சாரத்தின் ஒரு அணுப்பிரமாண அளவு தொழுநோய்க்கு மருந்தாகித் தொழுநோயைக் குணப்படுத்தும்.

எருக்கின் சாரத்தில் ஒரு அணுப்பிரமானத்தைத் தனியாகப் பிரித்தெடுக்க இதுவே மருத்துவ வழி.

அதனால்தான் பிரமதேவன் இதனைத் தேவ ரகசியமாக மறைத்து உங்களிடம் கூறாமல் நோன்பு முறையை மட்டுமே கூறினார்" என்றார்.

SCROLL FOR NEXT