ஆன்மிக களஞ்சியம்

உடலுக்குள்ளேயும் வெளியேயும் மந்திரங்கள் செய்யும் அற்புதம்

இந்த மந்திரங்களை உச்சரிக்கும் போது ஏற்படும் ஒலியின் அதிர்வலைகள் செடிகொடி, மரங்களையும் உற்சாகப்படுத்துகிறது. அதனால் அவைகள் மள மளவென்று செழிப்பாக வளர்ந்து பூத்து, காய்த்து குலுங்குகிறது.

மாலை மலர்

இப்படி 'ஓம்' மாதிரியான வேதமந்திரங்கள் நம் உடலுக்குள் மட்டும் தனது முழு சக்தியைப் பயன்படுத்தி நற்செயல்களை செய்வதில்லை.

வெளியிலும் தன் ஆற்றலை பிரயோகிக்கிறது.

இந்த மந்திரங்களை உச்சரிக்கும் போது ஏற்படும் ஒலியின் அதிர்வலைகள் செடி, கொடி, மரங்களையும் உற்சாகப்படுத்துகிறது.

அதனால் அவைகள் மள மளவென்று செழிப்பாக வளர்ந்து பூத்து, காய்த்து குலுங்குகிறது.

நமது முன்னோர்கள் பலர் தங்களை வருத்தும் கொடிய நோய்கள் தீர விஷ்ணு சகஸ்ர நாமம் சொல்லி, துளசி அர்ச்சனை செய்து வந்திருக்கிறார்கள்.

அவர்கள் நோயும் குணமாகி இருக்கிறது.

ஓம் சக்தி பராசக்தி என்று சொன்னால் நமக்கு நல்ல துணிவும், உள்ளத்தில் நல்ல தெளிவும் கிடைக்கும்.

கிடைக்கின்ற நேரத்தில் எல்லாம் இந்த மந்திரங்களைச் சொல்லி வந்தால் அதன் பலன் அநேகம்.

பொதுவாக மந்திரங்களை 108 முறை தொடர்ந்து சொல்ல வேண்டும்.

அல்லது 1008 முறை சொல்ல வேண்டும்.