ஆன்மிக களஞ்சியம்

திருஷ்டி தோஷம் ஓடி விடும்

சிலரது கொள்ளிக்கண் பார்வை மற்றவர்களது வாழ்க்கையை கடுமையாக பாதித்து விடும். இத்தகைய திருஷ்டியில் இருந்து தப்பிக்க ராமகிரி காலபைரவர் மிக சிறந்த வரபிரசாதியாக உள்ளார்.

மாலை மலர்

பிறரின் வாழ்க்கை வளர்ச்சிகள், முன்னேற்றங்கள்,உயர்வுகள், நல்லநிலைமைகள் போன்றவற்றை கண்டு, நம்மால் இவ்வாறு இருக்க முடியவில்லையே என்ற ஏக்க பெருமூச்சும் பொறுமலும், பொறாமையும் கொண்டு கெட்ட எண்ணங்கள் பலவற்றின் ஒட்டு மொத்த உருவமாக திகழ்பவரின் கண்பார்வையிலும், பேச்சிலும் கொடிய விஷத்தன்மைகள் நிரம்பி காணப்படும்.

இத்தகையோரின் கண்பார்வையே திருஷ்டி தோஷமாக பிறரை பாதிக்கச்செய்கிறது.

அவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனையும், பார்வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண்டும்.

இதுதான் முக்கியம்.

சிலரெல்லாம் வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்களையெல்லாம் தூவி வைப்பார்கள்.

பார்ப்பவர்களுக்கு அதிலேயே அவர்களுடைய சிந்தனை போய்விடும். அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய சிந்தனை வராமல் போய்விடும்.

சிலர் பூசணிக்காயை கட்டித் தொங்கவிடுவார்கள்.

சிலர் நாக்கு வெளியே தொங்கவிட்டுக்கொண்டிருக்கிற பொம்மையை வைத்திருப்பார்கள் சிலர் பிள்ளையாரை வைத்திருப்பார்கள்.

இன்னும் சிலர் கற்றாழையைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். இதுபோன்ற சிலவற்றை செய்யலாம்.

இதெல்லாம் பயனுள்ளதாக இருக்கும் என்றாலும் சில சமயம் சிலரது கொள்ளிக்கண் பார்வை மற்றவர்களது வாழ்க்கையை கடுமையாக பாதித்து விடும்.

இத்தகைய திருஷ்டியில் இருந்து தப்பிக்க ராமகிரி காலபைரவர் மிக சிறந்த வரபிரசாதியாக உள்ளார்.

அவரை மனம் உருக வேண்டினால் எவ்வளவு பெரிய திருஷ்டி தோஷமும் விலகி ஓடி விடும் என்பது பக்தர்களின் அனுபவம் ஆகும்.

எனவே ராமகிரி காலபைரவரை வழிபட செல்லும் போது மனதுக்குள் திருஷ்டி தோஷம் விலகி ஓடவும் வேண்டிக் கொள்ளுங்கள்.