ஆன்மிக களஞ்சியம்

தெளிவு தைரியத்திற்கு ரோமரிஷியை வழிபடுங்கள்

ரோமரிஷி சந்திரகிரகத்துக்கு உரியவர் ஆவார். எனவே அவரை வழிபட்டால் சந்திரகிரக தோஷம் இருந்தால் அகன்று விடும்.

மாலை மலர்

ஏதாவது பிரார்த்தனை இருந்தால் வீட்டில் ஒரு இடத்தில் ரோமரிஷியை ஆவாகனம் செய்து பழம், தண்ணீர் வைத்து வேண்டி கொண்டால் நினைத்தது நடக்கும் என்று பலன் பெற்றவர்கள் சொல்கிறார்கள்.

ரோமரிஷி சந்திரகிரகத்துக்கு உரியவர் ஆவார்.

எனவே அவரை வழிபட்டால் சந்திரகிரக தோஷம் இருந்தால் அகன்று விடும்.

மனதில் தைரியத்தை ஏற்படுத்துவது சந்திரகிரகம்தான்.

ரோமரிஷியை கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் எந்த அளவுக்கு வழிபடுகிறார்களே....

அந்த அளவுக்கு மனதில் தெளிவும், தைரியமும் உண்டாகும்.

முக்கிய பிரச்சினைகளில் முடிவெடுக்க வேண்டும் என்று நினைத்தால் ரோமரிஷியை மனமுருக வேண்டினால் தெளிவான முடிவெடுப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

எனவே கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் ரோமரிஷியை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.