ஆன்மிக களஞ்சியம்

சிறுவாபுரி முருகன்

கந்த கடவுள் விரும்பி உறையும் தலங்களில் இதுவும் ஒன்று. இன்றும் அவர் லிங்கசொரூபமாக திகழ்வதாக சொல்கிறார்கள்.

வீடுபேறு அருளும் அற்புதத் திருத்தலம் சிறுவாபுரி.

சென்னை, கொல்கத்தா நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டிக்கு முன்னதாக இத்தலம் அமைந்திருக்கிறது.

கந்த கடவுள் விரும்பி உறையும் தலங்களில் இதுவும் ஒன்று.

அருணகிரிநாதரின் கனவில் தோன்றி முருகன் அருள் பாலித்த தலம் என்ற சிறப்பும் இந்த தலத்துக்கு உண்டு.

முருகனுக்கு உகந்த தினங்களில் சிறுவாபுரிக்கு சென்று, அபிஷேக ஆராதனைகள் செய்து தரிசித்து வழிபட வீடு மனை யோகம் அமையும் என்பது ஐதீகம்.

மயிலம்

முருகப்பெருமானின் வாகனமாகும் ேபறுபெற்ற சூரன், மயில் உருவத்தில் மலைபோல் நின்று தவம் செய்த தலம், மயிலம்.

திண்டிவனம் அருகேயுள்ள இந்த தலத்தில் கடும் தவமிருந்து முருகனை தரிசிக்கும் பாக்கியம் பெற்றார் சங்குகண்ணன் என்ற சித்தர்.

இன்றும் அவர் லிங்கசொரூபமாக திகழ்வதாக சொல்கிறார்கள்.

மயிலம் முருகனை வழிபட அல்லல்கள் நீங்கும்;

ஆனந்தம் பெருகும்.

SCROLL FOR NEXT