ஆன்மிக களஞ்சியம்

சிங்கப்பூரில் தைப்பூசம்

அழகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்துவோர் பூசத்தன்று தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். சிங்கப்பூர் முருகன் கோவிலில் வேல் தான் மூலவர்.

மாலை மலர்

சிங்கப்பூரில் தைப்பூசம் மிகச்சிறப்பாககொண்டாடப்படும் விழாவாகும்.

தைப்பூசத்திற்கு முதல் நாளில் இருந்தே விழா களைகட்டும்.

சிங்கப்பூர் முருகன் கோவிலில் வேல் தான் மூலவர்.

இவருக்கு பாலாபிஷேகம் நீண்ட நேரம் நடக்கும். தைப்பூசத்தன்று முருகன் வெள்ளித் தேரில் லயன் சித்தி விநாயகர் கோவில் வரை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாலை தேர் திரும்ப முருகன் கோவிலை வந்தடையும்.

பக்தர்கள் காவடி எடுப்பார்கள்.

மற்றவர் பெருந்திரளாக தேரினை இழுத்துச் செல்கிறார்கள்.

அழகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்துவோர் பூசத்தன்று தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

சீனர்கள் கூட முருகனுக்கு வேண்டுதல்கள் செய்து பூசத்தன்று நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.