ஆன்மிக களஞ்சியம்

சக்கரத்தாழ்வார் வழிபாட்டு பலன்கள்

கண்ணுக்கு தெரிந்த, தெரியாத எதிரிகள் எல்லோரும் கூண்டோடு அழிந்து போவர்.ஏழ்மை அழிந்து, செல்வம் குவியும். எதிர்பாராத பட்டங்களும், பதவிகளும் இவர்களைத் தேடி வரும்.

சக்கரத்தாழ்வாரை தினமும் தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் கீழ்வரும் பலன்கள் கிடைக்கும்.

கண்ணுக்கு தெரிந்த, தெரியாத எதிரிகள் எல்லோரும் கூண்டோடு அழிந்து போவர்.

இவரை எவரும் எதிர்க்க மாட்டார்கள்.

அனைவரும் இவர்கள் மேல் அன்பைப் பொழிவார்கள்.

ஏதாவது ஒரு காரணத்தினால் மனதில் எப்போதாவது பயம் தோன்றினால் இவர் மந்திரங்களைச் சொல்வதன் மூலம் அந்தப்ப பயமானது இல்லாது அழிந்து ஒழிந்து போகும்.

கடுமையான தீர்க்க முடியாத வியாதிகள் உள்ளவர்கள் இவரை எண்ணித் துதித்து வந்தால் அந்த வியாதிகள் குணமாகும்.

வறுமையினால் பாதிக்கப்பட்டு ஒருவர் துக்கத்தை அடைந்திருந்தால் இவர் வழிபாட்டின் மூலமாக வறுமை ஒழிந்து,

ஏழ்மை அழிந்து, செல்வம் குவியும். எதிர்பாராத பட்டங்களும், பதவிகளும் இவர்களைத் தேடி வரும்.

திருமணம் நடைபெறுவதில் சிக்கல்கள் இருந்தாலோ, பிறரின் தலையீட்டினால் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலோ அவை எல்லாம் நீங்கித் திருமணம் நல்ல முறையில் நடைபெறும்.

நோயாலோ, விபத்தாலோ, நஞ்சாலோ, பகைவரின் அச்சுறுத்தாலோ விளைந்திருக்கும் மரண பயம் அகலும். புத்தியில் தெளிவு உண்டாகும். ஞான வைராக்கியம் பிறக்கும்.

SCROLL FOR NEXT