ஆன்மிக களஞ்சியம்

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

சிறுவயதிலேயே அரிய பெரிய நூல்களைப் புரட்டிப் பார்த்து விடுவார்கள். மற்றவர்களுடைய முன்னேற்றத்திற்குத் தன்னலமற்றுப் பாடுபடுவர்.

மாலை மலர்

புதன் என்றால் தெரிந்தவன் என்று பொருள்.

இதனால்தான் புதனைக் கல்விக் காரகன் அல்லது, வித்யாகாரகன் என்று சோதிடப் புலவர்கள் அழைத்தனர் போலும்!

சூரியனுக்கு வெகு அருகாமையில் ஒளிர்வதோடு மிகத்துரிதமாய் மூன்றே மாதங்களுக்குள் சூரியனைச் சுற்றிவரும் ஆற்றலுடைய கிரகமாகையால் சூரியனைப் பற்றி நன்கு தெரிந்தவன் புதன்.

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் கற்றறியும் திறமை உடையவர்களே.

அதுவும் துரிதமாய்க் கற்றுணரக் கூடியவர்கள்.

சிறுவயதிலேயே அரிய பெரிய நூல்களைப் புரட்டிப் பார்த்து விடுவார்கள்.

புரட்டாசியில் தோன்றிய இவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளே!

பல நூல்களை நன்றாகப் புரட்டியவர்களாகையால் தர்க்கம் பேசுவதிலும் ஆற்றல் உடையவர்களாக இருப்பார்கள்.

குதர்க்கம் செய்வதிலும் வித்தகர் என்று பெயர் எடுப்பார்கள்.

அரிய நூல்களைச் சேகரிப்பர். சீக்கிரத்தில் அரச யோகத்தை அடைந்திடுவர்.

கற்றதை மாற்றிப் பேசிப் போற்றுதலைப் பெறுவர். மற்றவர்களைப்போல நடிப்பதில் கில்லாடிகள்.

படிக்காத மேதைகளும், படித்த பட்டதாரிகளும் விஞ்ஞானிகளும் மெய் ஞானிகளும் இம் மாதத்தில் பிறந்தவர்களே.

புரட்டாசியில் பிறந்தவர்கள் ஆழ்ந்து சிந்திக்காமல் எந்த விவகாரங்களிலும் தலையிட மாட்டார்கள் எதையும் திறம்படச் செய்யவேண்டு மென்ற கொள்கை உடையவர்.

மற்றவர்கள் செய்யும் குற்றங்குறைகள் முதன்முதலில் இவர்களின் கண்களுக்குத்தான் தோன்றும், ஒளிவு மறைவின்றி சாமர்த்தியமாக ஆனால், அழுத்தந் திருத்தமாக எடுத்துக் கூறிவிடுவார்கள்.

மற்றவர்கள் சாதாரணமாகப் புரியக்கூடிய தவறுகள் ஏற்படாவண்ணம் தாம் நடந்துகொள்வர்.

மற்றவர்களுடைய முன்னேற்றத்திற்குத் தன்னலமற்றுப் பாடுபடுவர்.

தம்முடைய திறமையினாலும் உழைப்பினாலும் உயர்ந்த அந்தஸ்தைத் தேடி அடைந்திடுவார்கள்.

பிறரைப் புகழ்ந்தோ அல்லது குறுக்கு வழிகளைக் கடைப்பிடித்தோ நினைத்ததை சாதிப்பது இவர்களுக்குப் பிடிக்காது.

அசைவம் சாப்பிடாதீர்கள்

பிரண்டை தண்ணீர் இல்லாமல் வளரக்கூடியது.

அத்தகைய பிரண்டையும் புரட்டாசி மாதத்தில் காயும் என்பார்கள்.

ஏனென்றால், அந்த அளவிற்கு புரட்டாசி மாதத்தில் வெயில் இருக்கும்.

சாதாரணமாக சைவ உணவு நமது உடல் நலத்துக்கு எல்லா வகையிலும் உகந்தது.

எனவே வெயில் காலங்களில் அசைவ உணவுகளைத் தவிர்த்தால் நமக்கு நல்லது.