பில்லிகுண்டு மாரியம்மன்  
ஆன்மிக களஞ்சியம்

ஊட்டமலையில் பிலிகுண்டு மாரியம்மன் கோவில் திருவிழா

சாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலை கிராமத்தில் பிலிகுண்டு மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

கோவில் திருவிழா

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான கம்பம் நடுதல், அம்மனுக்கு சக்தி கரகம் எடுத்தல், மற்றும் பொங்கல் வைத்து, மாவிளக்கு பூஜை, சிறப்பு அலங்கார பூஜை உள்ளிட்டவை பாரம்பரிய முறைப்படி நடத்தப்பட்டது.

சாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நிகழ்ச்சிகள்

விழாவையொட்டி பாரம்பரிய கலை நிகழ்ச்சி, நாட்டுப்புறப் பாடல்கள் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது

விழாவிற்கு வருகை தந்த அனைத்து பொது மக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அம்மன் அலங்காரங்களில் வேடமிட்டு வாகனங்களில் ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு பூஜைகள்

பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யபட்டு கம்பம் ஆற்றங்கரைக்கு எடுத்துச் சென்று ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது, விழாவில் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.