ஆன்மிக களஞ்சியம்

நவக்கிரக தோஷங்களை நீக்கும் ஆஞ்சநேயர் வழிபாடு

நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்குகின்றன. கடன் தொல்லைகள், விரோதிகள் தொல்லைகள் நீங்குகின்றன.

மாலை மலர்

நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்குகின்றன.

தவிர கடன் தொல்லைகள், விரோதிகள் தொல்லைகள் நீங்குகின்றன.

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை, சந்தன காப்பு, வெண்ணை காப்பு, வெள்ளி அங்கி, முத்தங்கி அலங்காரங்கள் இங்கு சிறப்பு.

புதிதாக வாகனங்கள் வாங்கும் போதும், மக்கள் வெளி ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போதும்

வாகனங்களுடன் வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு புறப்படுவது வழக்கம்.

இங்கு உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் நற்புத்தி, சரீர பலம், கீர்த்தி, அஞ்சாமை, பயமின்மை, நோயின்மை,

தளர்ச்சி இன்மை, வாக்கு சாதுர்யம் முதலிய நன்மைகள் ஏற்படும்.

நவக்கிரக தோஷங்கள் நீங்குகின்றன.

தவிர கடன் தொல்லைகள், விரோதிகள் தொல்லைகள் நீங்குகின்றன.

நோய் நொடியால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட்டால் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடைகின்றன.

நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் நவக்கிரகங்களை வழிபட்டதற்கு இணையானது என்பதால்

நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள ஆஞ்சநேய சுவாமியை வழிபட ஆயிரக்கணக்கில் குவிகின்றனர்.