ஆன்மிக களஞ்சியம்

நன்மைகள் கிடைக்க சக்கரத்தாழ்வார்

தெய்வங்களில் சிறப்புடைய தெய்வம் மகாவிஷ்ணு. அவர் ஸ்ரீமன் நாராயணன் ஆவார். உலகம் அனைத்தையும் படைத்து காத்து தன்பால் அடக்கி கொள்ளவும் ஆற்றல் படைத்தவர் மகாவிஷ்ணு.

மாலை மலர்

தெய்வங்களில் சிறப்புடைய தெய்வம் மகாவிஷ்ணு. அவர் ஸ்ரீமன் நாராயணன் ஆவார்.

உலகம் அனைத்தையும் படைத்து காத்து தன்பால் அடக்கி கொள்ளவும் ஆற்றல் படைத்தவர் மகாவிஷ்ணு.

அவரின் பெருமையை 18 புராணங்களிலும் சிறக்கப்பேசுகின்றார்கள். மகாவிஷ்னுக்கு சிறந்த ஆயுதங்களாக போற்றப்படுபவை 5 ஆயுதங்களாகும்.

அவை சங்கு, சக்கரம், கெதை, வில், கத்தி இவற்றை ஐம்படை என்று கூறுவார்கள்.

படை என்ற சொல்லுக்கு ஆயுதம் என்று பொருள்.

இந்த ஐந்தாம் படையை கொண்டு பகவான் ஸ்ரீமன் நாராயணன் தீயவர்களை அழித்து நல்லவர்களை காப்பாற்றி வருகிறார் இந்த ஐந்து ஆயுதங்களில் சிறப்புடையது சக்கரமாகும்.

இந்த சக்கரத்திற்கு ஆழ்வார் என்று அடைமொழி சேர்த்து சக்கரத்தாழ்வார் என்று வைணவம் சிறப்பித்து பேசுகிறது.