ஆன்மிக களஞ்சியம்

மயில் வடிவில் மயிலம் முருகன் கோவில்

இயற்கையாக மட்டுமின்றி தெய்வ சக்திநிறைந்ததாகவும் வழிபடும் மரபு காலம் காலமாகத் தொடர்ந்து வருகிறது.

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பர். குன்றுதோறாடலில் சிறப்பு மிக்க தலமாக விளங்குவது மயிலம் திருத்தலம்.

எழில் கொஞ்சும் இயற்கைஅன்னை புடைசூழ மயில்கள் ஆட, கிளிகள் பாட, குரங்குகள் தாவ சூரபத்மன் மயில் வடிவில் தவம்இயற்றும் மலையாக காட்சியளிக்கிறது மயிலம் மலை.

மூலிகைச்செடிகள் பற்பலவும் நிறைந்த மாமலையாம் மயிலத்தில் திருமடம் அமைத்து பலஆண்டுகளாகத் தங்கி மோனத்தவம் இயற்றிய ஆதீன குரு ஸ்ரீ பாலசித்தர் ஆதிசிவஞானசுவாமிகள் கள்ளிப்பாலைஉணவாக உட்கொண்டவர் என்பது உலகறிந்தஉண்மை.

இந்த ஆலயத்தின் வேப்பமரம், அரசமரம் இவற்றை இயற்கையாக மட்டுமின்றி தெய்வ சக்திநிறைந்ததாகவும் வழிபடும் மரபு காலம் காலமாகத் தொடர்ந்து வருகிறது.

‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்பர் முன்னோர். ஆல் போல் தழைத்து அருகுபோல் வேரோடி என்பது முதுமொழி. மனித வாழ்வு ஏற்றம் பெற அக்காலம் முதல் கொண்டு எக்காலமும் நின்று உதவுபவை தாவரங்களே.

தேவாரம் பாடி அருளிய ஞானசம்பந்தப் பெருமானும் இயற்கையில் காணும் தாவரங்களைத் தமது பாடல்களில் பதிவு செய்து இயற்கையை இறைவனாகவே போற்றும் பேறு பெற்றார்.

இத்தகைய இன்பத்தை எந்நாளும் மனிதகுலம் பெற்றுத் தழைக்க மரங்களே துணை நிற்கின்றன.

இந்த மலையில் இயற்கையை மேலும் வளம் செழிக்கச் செய்யும் நிலையில் வள்ளி, தெய்வானை உடனுறை மணக்கோல முருகனை வழிபட வரும் பக்தர்கள் அனைவரும் உள்ளத்திற்கு ஆன்ம சுகத்தைப் பெறுவதோடு உடலுக்கு ஆரோக்கியத்தையும் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கில் மரம் நடும் பணி இனிதே தொடங்குகின்றது.

அவன்அருளாலே அவன் தாள் வணங்கி எனும் வாசகத்துக்கு ஏற்ப குருவருளும் திருவருளும்கூட்டுவிக்கும் வண்ணம் இயற்கையோடு இயைந்த வாழ்வை பக்தகோடிகள் அனுபவிக்க மரம் செடி கொடிகளை மயிலம் மலையில் நட்டு வளப்படுத்தி நாளும் மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்.