ஆன்மிக களஞ்சியம்

குல தெய்வத்தை தெரிந்துகொள்ள...

நம் குலதெய்வ நாம் செய்யும் எல்லாக் காரியங்களிலும் துணை நின்று நம்மை நல்வழிப்படுத்திச் செல்லும்.

குலதெய்வ வழிபாடு என்பது தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வரும் மிகவும் பழமையான வழக்கம். நம் மூதாதையர்கள் வழிபட்டு வந்த குலதெய்வத்தை நாமும் தொடர்ந்து வழிபட்டு வர நமக்கு வரும் துயரங்கள் மறைந்து விடும்.

நமக்குப் பிடித்த இஷ்ட தெய்வத்தை வழிபட்டு வந்தாலும் ஆண்டிற்கு ஒரு முறையாவது குலதெய்வம் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று பொங்கல் இட்டு வழிபாடு செய்து வந்தால் நம் குலதெய்வ நாம் செய்யும் எல்லாக் காரியங்களிலும் துணை நின்று நம்மை நல்வழிப்படுத்திச் செல்லும்.

சிலருக்குத் தங்கள் குலதெய்வம் எது எனத் தெரியாது என்பர். அவர்கள் ஒரு நிறை செம்பில் தூய தண்ணீர் நிரப்பி பூஜையறையில் வைத்து குலதெய்வத்தை நினைத்து விளக்கேற்றித் தொடர்ந்து பதினைந்து நாட்கள் பூஜை செய்துவர அவர்களது குலதெய்வம் நான் இங்கிருக்கிறேன் எனத் தெரிவிக்கும் என்பார்கள்.