ஆன்மிக களஞ்சியம்

கண் நோய்களை தீா்க்கும் சூரிய பகவான்

இதனால் ஞாயிறு தலம் கண் நோய்களுக்கு மிகச்சிறந்த பரிகார தலமாக திகழ்கிறது.இந்த வழிபாட்டின் போது கோதுமை பிரசாதம் நைவேத்தியமாக படைப்பது நல்லது.

ஞாயிறு தலத்துக்கு வந்த சோழ மன்னன், சிவபெருமான் உறைந்திருந்த தாமரை மலரை வாளால் வெட்டியதால் தனது கண் பார்வை இழந்தான்.

அந்த ஆலயத்தை கட்டி பிறகுதான் அவனுக்கு பார்வை கிடைத்தது.

இதனால் ஞாயிறு தலம் கண் நோய்களுக்கு மிகச்சிறந்த பரிகார தலமாக திகழ்கிறது.

கண்களில் பிரச்சினை இருப்பவர்கள் இந்த தலத்துக்கு வந்து கோதுமை, சிவப்பு துணி, தாமரை பூ,

தாமிர உலோகம் ஆகியவற்றை சூரிய பகவானுக்கு படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால் பலன் கிடைக்கும்.

ஞாயிற்றுக்கிழமை இந்த வழிபாடு செய்வது நல்லது.

அப்படி முடியாதவர்கள் அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் இந்த வழிபாட்டை செய்யலாம்.

இந்த வழிபாட்டின் போது கோதுமை பிரசாதம் நைவேத்தியமாக படைப்பது நல்லது.

கோதுமை கேசரி, கோதுமை பொங்கல் ஆகியவற்றை படைக்கலாம்.

இந்த கேசரி, பொங்கலை பக்தர்கள் வீட்டில் இருந்தே தயார் செய்து கொண்டுவந்து சூரியனுக்கு படைக்கலாம்.

வழிபாடு முடிந்த பிறகு இந்த பிரசாதங்களை ஆலயத்தில் உள்ள ஏழை எளியவர்களுக்கு விநியோகம் செய்யலாம்.

இப்படி செய்தால் நிச்சயம் கண் பிரச்சினைகள் தீரும்.

SCROLL FOR NEXT