ஆன்மிக களஞ்சியம்

இத்தலத்தை பூஜித்து பேறு பெற்றோர்

வேதங்கள் இத்தலத்தில் இறைவனைப் பூசித்து வழிபட்டதனாலேயே இத்தலத்து இறைவனுக்கு வேதகிரீசுவரர் என்னும் திருப்பெயரும் உண்டு. இத்தலத்து மலைக்கு வேதகிரி என்னும் திருப்பெயரும் உண்டு.

இத்தலத்தில் காலந்தோறும் இறைவனைப் பூசித்துப் பேறு பெற்ற கழுகுகள் விபரம் வருமாறு:

கிரேதாயுகத்தில் &சண்டன், பிரசண்டன் என்னும் கழுகுகள்.

திரேதாயுகத்தில் &சம்பாதி, ஜடாயு என்னும் கழுகுகள்

துவாபரயுகத்தில் &சம்புகுத்தன், மாகுத்தன் என்னும் கழுகுகள்

கலியுகத்தில் &சம்பு, ஆதி என்னும் கழுகுகள்.

இந்த 2 கழுகுகளும் பூசித்துப் பேறுபெற இத்தலத்து மலையை வணங்கிக் கொண்டு வருகின்றன.

கழுகுகள் மட்டுமின்றி இத்தலத்தில் நந்திதேவர், அட்டவசுக்கள், பசு, இந்திரன், வராகன், வேதங்கள், விஷ்ணு, பிரமன், முருகன், சந்திரன், கோடிருத்திரர் ஆகியோரும் இறைவனைப் பூசித்து வழிபட்டு பேறுகள் பெற்றுள்ளனர்.

கோடிருத்திரர் இத்தலத்தில் இறைவனை பூசித்ததற்கு சான்றாக, இத்தலத்து சங்கு தீர்த்தக்கரைக்கு தென்கிழக்கில் சிறிது தூரத்தில் ருத்திரகோடீசுவரர் திருக்கோவில் அமைந்திருப்பதை காணலாம்.

வேதங்கள் இத்தலத்தில் இறைவனைப் பூசித்து வழிபட்டதனாலேயே இத்தலத்து இறைவனுக்கு வேதகிரீசுவரர் என்னும் திருப்பெயரும் உண்டு.

இத்தலத்து மலைக்கு வேதகிரி என்னும் திருப்பெயரும் உண்டு.

இத்தலத்து மலையே வேத வடிவமானது. இம்மலை ரிக், யசுர், சாம, அதர்வணம் போல நான்கு குன்றுகள் இணைந்திருப்பதே இதற்கு சான்று.

SCROLL FOR NEXT