ஆன்மிக களஞ்சியம்

குருபகவானும் தங்கமும்

குரு பகவான் சனி, சுக்கிரன், புதன் சாரம் பெற்று இருந்தாலும் தங்கம் வாங்கும் யோகம் அதிகரிக்கும்.

ஜோதிட ரீதியாக குரு என்று சொல்லப்படும் வியாழ பகவான்தான் தங்கத்தின் அதிபதி. பொன்னவன் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவர் ஒருவரது ஜாதகத்தில் ஆட்சி, உச்சம், நட்பு, கேந்திரம் அல்லது திரிகோணத்தில் இருந்தால் அவர்களது வீட்டில் தங்கம் இருந்துகொண்டே இருக்கும்.

குரு பகவான் சனி, சுக்கிரன், புதன் சாரம் பெற்று இருந்தாலும் தங்கம் வாங்கும் யோகம் அதிகரிக்கும். ஜென்ம லக்னத்திலிருந்து ஐந்தாம் வீட்டுக்கு அதிபதியானவர் குரு சாரம் பெற்றிருந்தாலும்,

ஐந்தாமிடத்தில் உள்ள கிரகம் இரண்டாம் அதிபதியின் பார்வை பெற்றாலோ அல்லது இரண்டாமிடத்தில் இருந்தாலோ தங்க ஆபரணம் அதிகம் சேர்ந்து வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

மேலும் ஆபரணம் மற்றும் கழுத்தை குறிப்பது மூன்றாமிடமாகும். ஜாதகத்தில் மூன்றாமிடத்துடன் குரு, சுக்கிரன் சம்பந்தம் இருப்பவர்களுக்கும் கழுத்தில் தங்க நகைகள் அணியும் யோகம் அமையும். சந்திரன் புதனும் சுபபலத்துடன் மூன்றில் நின்றால் தங்கம் அதிகம் சேரும் யோகம் உண்டு.

SCROLL FOR NEXT