தமிழ் மாதங்களில் ஆடி மாதம் சக்தி வழிபாட்டிற்கும், இயற்கைக்கும், விவசாயத்திற்கும் மிகவும் உகந்த ஆன்மீகப் புண்ணிய மாதமாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் தேடி வரும் திருவிழாக்களை நாம் கொண்டாடி மகிழ்ந்தால், கோடிப் புண்ணியமும், கோலாகல வாழ்க்கையும் கிடைக்கும். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது. குறிப்பாக இந்த மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருவார்கள். அம்மனுக்குத் தினசரி மற்றும் விசேஷ நாட்களில் 16 வகையான திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெறும்.
மன அமைதி மற்றும் சந்தோஷத்திற்காக செய்யப்படுகிறது.
செல்வ செழிப்பு உண்டாக செய்யப்படுகிறது.
மங்கல காரியங்கள் கைகூடவும், திருமண தடை நீங்கவும் செய்யப்படுகிறது.
உடல் வெப்பம் தணியவும், பிணிகள் தீரவும் செய்யப்படுகிறது.
விசேஷ நாட்களில் மூலவர் உடல் முழுவதும் சந்தனம் பூசப்பட்டு, அம்மன் மிகவும் குளிர்ச்சியாகவும் வாசனை நிறைந்த வளாகவும் காட்சியளிப்பார்.
அன்னைக்கு சாத்தப்படும் ஒவ்வொரு பூவிற்கும் ஒரு சிறப்பு உண்டு.
இது காளியம்மனுக்கு மிகவும் உகந்தது. நோய்களை தீர்க்கும் சக்தியாக கருதப்படுகிறது.
அம்மனின் சாந்த சொரூபத்தை வழிபடவும், மன தூய்மைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
காளி வழிபாட்டில் உக்கிரத்தை தணித்து அருளை பெற இவை சாத்தப்படுகின்றன.
திருவிழா நாட்களில் ஆயிரக்கணக்கான கிலோ பூக்களை கொண்டு “புஷ்ப அலங்காரம்” செய்யப்படும், அப்போது அம்மன் பூக்களுக்கு நடுவே தேவதை போல காட்சியளிப்பார்.
ஆடிப்பெருக்கு விழா, பல்வேறு வழிபாடுகள் மற்றும் கொண்டாட்டங்களுடன் நடைபெறுகிறது. நதிக்கரைகளில் கூடி, மக்கள் சூரிய பகவான், ஈசன், விஷ்ணு போன்ற தெய்வங்களை வணங்கி, தங்கள் நன்றியையும், வேண்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறார்கள்.
பூஜைகள் செய்வது, புதிய ஆடைகள் அணிவது, சிறப்பு உணவுகளை சமைத்து உண்பது போன்ற பாரம்பரிய நடைமுறைகள் இன்றும் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக, அரிசி மற்றும் காய்கறிகள் சார்ந்த உணவுகள் இந்த விழாவில் முக்கிய இடம் வகிக்கின்றன.