ஆன்மிக களஞ்சியம்

ஆடி மாதம் அம்மன் சிறப்புகள்

ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம்.

மாலை மலர்

தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம்.

அம்மனுக்கு உரிய மாதமாக இது போற்றப்படுகிறது.

பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம்.

பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார்.

சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும்.

ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம்.

இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.