நமக்கு எப்பவுமே வெப்பமான பூமிதான். அதுதான் தமிழ்நாடு. இதில் வெயில் காலம் என்று வேறு பேர் வைத்து கடும் வெப்பத்தை கடக்கின்றோம். இது வருடா வருடம் நடக்கும் நிகழ்வுதான். இருப்பினும் அதிக ஜனத்தொகை, நெரிசல், கட்டிடங்கள், காடுகள் இன்மை இவை அனைத்தும் கூடிக் கொண்டே செல்வது வாழ்க்கையை கடுமை ஆக்குகின்றது.
நம்மை நாம் எப்படி பாதுகாத்து கொள்வது?
* காலை 4 மணி முதல் 6 மணி வரை சற்று குளிர்ச்சியாகத்தான் இருக்கும். இந்த நேரத்தினை அதிகம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
* மாலை 4 மணி முதல் 5 மணி வரை மேலும் வெயில் தாக்கம் சற்று குறையும். இந்த நேரத்தினையும் அதிகம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
* அதிகாலை நடைபயிற்சி நல்லது.
* 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் பாட்டிலில் நிரப்பி அதனை சரியாக குடிக்க வேண்டும்.
* கையில் தண்ணீர் பாட்டிலை நிரப்பி வைத்து அதனை சரியாக குடிக்க வேண்டும்.
* கையில் தண்ணீர் இல்லாமல் எங்கும் செல்லக்கூடாது. உடலில் நீர் சத்து குறையவே கூடாது.
* இளநீர் சிறந்த இயற்கை பானம்.
* நெல்லிக்காய் ஜூஸ் உடல் சூட்டை குறைக்கும்.
* நீர் மோர் மிகச் சிறந்தது.
* லேசான உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும்.
* எண்ணை உணவுகள் வேண்டாேம.
* அதிக கார உணவுகள் சூட்டை அதிகரிக்கும் என ஆயுர்வேதம் கூறுகின்றது.
* வெள்ளரிக்காய் நல்ல குளிர்ச்சி தரும்.
* தர்பூசணி, முலாம் இவை நன்மை பயக்கும்.
* அண்ணாச்சி பழம், ஆப்பிள், நுங்கு, திராட்சை என படி வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.
* 11 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்லாமல் இருக்க வேண்டும்.
* பருத்தி ஆடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* வெளிர்நிற ஆடைகள் வெப்பத்தை குறைக்கும்.
* குடை அவசியம். சன் ஸ்கிரீன் மிக அவசியம்.
குழந்தைகள் கொளுத்தும் வெயிலில் விளையாட வேண்டாமே. இதை முதியவர்கள் சற்று கூடுதலாக கவனிக்க வேண்டும்.
உடல் சோர்வு ஏற்பட்டால் உடனே ஓய்வு தேவை. குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது. தினமும் 2 வேளை குளிக்க வேண்டும். தலையில் எண்ணை தடவி குளிப்பது குளிர்ச்சி தரும் என ஆயுர்வேதம் கூறுகின்றது.
நிழலில் இருங்கள். மரங்கள் நடுங்கள். பிற்காலத்திற்கு உதவும். வீட்டில் காற்றோட்டம் இருக்க வேண்டும். குளிர் சாதனங்களை அளவோடு பயன்படுத்துவோம். ஐஸ்நீர் தவிர்த்து விடுங்கள். பானை நீர் நல்லது. இயற்கை பானங்களே நல்லது. நன்னாரி, பதநீர், மோர், பழையசாதம், ரோஸ்மில்க் நல்லது. மதிய வேளையில் ஓய்வு தேவை. மரநிழல் நல்லது. வீட்டின் மேல் தளத்தில் தண்ணீர் ஊற்றலாம்.
உடற்பயிற்சிக்கு காலை அல்லது மாலை நேரத்தில் செய்ய வேண்டும். தியானம் செய்வது வெப்ப அழுத்தத்தை குறைக்கும். யோகா மன அமைதி தரும். மெல்லிய படுக்கை விரிப்புகளை பயன்படுத்துங்கள். வெப்பம் மன அழுத்தத்தினை ஏற்படுத்தும். கோடை காலத்தில் பயணங்கள் சிறிய பயணங்களாக இருக்கட்டும். மாலை நேரத்தில் கடற்கரைக்கு செல்லலாம். கடலில் குளிப்பது, நீந்துவது இவற்றில் கவனம் தேவை.
பெரியோர் துணையின்றி செல்லக் கூடாது. கையில் தண்ணீர் இல்லாமல் வெளியே செல்லாதீர்கள். வாகனத்தில் வெப்பம் அதிகரிக்கும். ஏர்கண்டிஷன் அளவோடு பயன்படுத்துவோம். கண் பாதுகாப்பு கண்ணாடி அணிய வேண்டும். யூவி கதிர்கள் கண்களுக்கு தீங்கு தரும். சரும பராமரிப்பு அவசியம். எண்ணை குளியல் நல்லது. சோற்று கற்றாழை ஜெல் பயன்படுத்தலாம்.
* குழந்தைகளுக்கு நீர் சத்து உணவு அவசியம்.
* திரவ உணவுகள், பழ வகைகள் நல்லது.
* வெப்பநிலை உடல் பலவீனத்தினை தரும்.
* உப்பு, சர்க்கரை கலந்த ஒ.ஆர்.எஸ். கரைசல் உதவும்.
* உடல் வெப்பம் அதிகரித்தால் உடனே சிகிச்சை தேவை.
* லேசான இரவு உணவு நல்லது.
* பருப்பு, காய்கறி உணவுகள் உடலுக்கு நல்லது.
* வெய்யிலில் சமைக்கும் பொழுது காற்றோட்டம் தேவை.
* காபி, டீ அளவோடு குடியுங்கள்.
* வீட்டிலேயே பானங்கள் தயாரிக்கலாம்.
* தலைக்கு துணி கட்டிக் கொள்ளலாம்.
* வெய்யிலின் பாதிப்பு அறிகுறிகளை தெரிந்துக் கொள்ள வேண்டும்.
* மயக்கம் வந்தால் உடனே தண்ணீர் தெளித்து நிழல் இடத்திற்கு மாற்ற வேண்டும்.
* அதக உழைப்பை தவிர்க்க வேண்டும்.
* அதிக நேரம் மொபைல் பயன்படுத்த வேண்டாம். கண் சோர்வு ஏற்படும்.
* வெய்யில் உடல் சக்தியை குறைத்துவிடும்.
* நீரிழிவு நோயாளிகள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
* ரத்த அழுத்தம் பாதிக்கப்படலாம்.
* உடல் கூறும் சிக்னல்களை கவனிக்க வேண்டும்.
* சிறிய மாற்றங்கள் பெரிய நன்மைகள் தரும்.
* சுத்தம் மிகவும் முக்கியம்.
* வியர்வை காரணமாக தொற்று ஏற்படும்.
* உடைகளை அடிக்கடி மாற்றுங்கள்.
* வீட்டில் குப்பை சேர்க்காது இருங்கள்.
* தண்ணீர் வடிகட்டி காய்ச்சி ஆற வைத்து குடிக்க வேண்டும்.
* வெயிலில் உணவு கெடலாம்
* அவ்வப்போது சமைத்து எடுத்துக் கொள்ளுங்கள்
* முடிந்த வரை வெளி உணவினை தவிருங்கள்.
* கைகளை நன்கு கழுவுங்கள்.
* பசுமை பாதுகாப்பு அவசியம்.
* தண்ணீரை வீணாக்காமல் பாதுகாப்பது அவசியம்.
* சுய கட்டுப்பாடு அவசியம். மது, புகை அவசியம் தவிர்க்க வேண்டும்.
* சமூக பொறுப்பு வேண்டும். மற்றவர்களையும் கவனியுங்கள்.
* தண்ணீர் வழங்கலாமே.
* பறவைகளுக்கு தண்ணீர் அவசியம்.
* வெயில் காலம் ஒரு சவால் தான். சரியான திட்டமிடல் அவசியம்.
* ஆரோக்கியமே செல்வம்... இயற்கையே தோழன்.
ஆக மேற்கூறிய நமக்கு நன்கு தெரிந்த அனைத்து கருத்துகளையும் மீண்டும் மனதில் நிலைநிறுத்தி கோடையை வரவேற்போம்.
நடக்கும் போது கால்கள் கனமாக இருப்பது போல் உணர்கிறீர்களா?
நடக்கும் பொழுது கால்கள் கனமாக இருப்பதற்கு ரத்த ஓட்ட குறைபாடு இருக்கலாம். ரத்த ஓட்டம் குறைந்தால் ஆக்சிஜன் மற்றும் ஊட்டச் சத்து குறையும்.
இதனால் நடக்கும் பொழுது சோர்வு, கனத்த உணர்வு ஏற்படும்.
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதும், நின்றிருப்பதும் காரணமாக இருக்கலாம்.
நரம்பு கோளாறுகள் இருக்கலாம்.
கால் ரத்தக் குழாயில் வால்வுகள் சரியாக வேலை செய்யாது ரத்தம் இருதயத்திற்கு திரும்ப போவது சரியில்லாமல் இருக்கலாம் வீக்கங்கள், நரம்பு சுருட்டல் பாதிப்புகள் இருக்கலாம்.
கால் ரத்த குழாய்கள் சுருங்கி இருக்கலாம்.
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகிய பாதிப்பு காரணமாக இருக்கலாம்.
* தசைகளில் சோர்வு காரணமாக இருக்கலாம். இவை அதிகமாக நடப்பது, தசைகளின் மறு சீராகுதல் இன்மை, அதிக விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு தொடரும்.
* நீண்ட நேரம் உட்கார்ந்து, நின்று இருப்பவர்களுக்கு ரத்த ஓட்டம் குறைந்து காலில் நீர் கோர்க்கலாம்.
* பொதுவாக அலுவலகத்தில் நீண்ட நேரம் நகராது அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இவ்வாறு ஏற்படும்.
* உடலின் எடை அதிகமானால் கால்களுக்கு அதிக அழுத்தம் இருக்கும்.
* மூட்டுகளில் அழுத்தம் அதிகரிக்கும்.
* தண்டுவட பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம்.
* மக்னீசியம், பொட்டாசியம், இரும்பு சத்துகள் குறைபாடு இருக்கலாம்.
* நீர் சத்து குறைபாடு கூட இருக்கலாம்.
* கால்களில் நீர் சேர்ந்து இருக்கலாம்.
* இருதய, சிறுநீரக பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம்.
* உடற்பயிற்சி இன்மை, புகை பிடித்தல், இறுகிய ஆடைகள் இவைகளும் காரணமே.
* தொடர்ந்து கால்கள் கனமாக உணர்ந்தாலோ, வீக்கம், சரும நிற மாற்றம் இருந்தாலோ, நடக்கும் பொழுது வலி அதிகமாக இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
பொதுவில் மருத்துவர் ஆலோசனை பெற்று
* 45 நிமிடங்கள் நிதான வேகத்தில் அன்றாடம் நடக்கலாம்.
* முறையாக நடக்க வேண்டும். சரியான காலணி, உடை, தொய்ந்து மடங்காமல் நடப்பது போன்றவை அவசியம்.
* எடை குறைய இத்துடன் கலோரி சத்தினை குறைத்து உண்பதும் அவசியம்.
* கவனத்துடன் செய்யுங்கள். தொடர்ந்து செய்யுங்கள்.
* உங்களை சிறந்த வராக ஆரோக்கியமான வராக நீங்களே மாற்றிக் கொள்ளுங்கள்.