குடல் என்பது உணவை செரித்து உடலுக்குத் தேவையான சத்துகளை உறிஞ்சும் முக்கிய உறுப்பு. நல்ல குடல் ஆரோக்கியம் இருந்தாலே உடல் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றது. குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகின்றன.
குடல் ஆரோக்கியம் மன நிலையுடனும் தொடர்பு கொண்டது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்குக் காணப்படும்.
* மலச்சிக்கல் * வயிற்றுப் போக்கு * வயிறு உப்பிசம் * அமிலத்தன்மை * அஜீரணம் * உணவு ஒவ்வாமை * குடல் தொற்று ஆகியவை ஆகும்.
* சுகாதாரமற்ற உணவு * குறைந்த நார்சத்து, போதிய நீர் அருந்தாதது * அதிக எண்ணை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் * மன அழுத்தம் * உடற்பயிற்சி இல்லாமை * அடிக்கடி ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்துதல் ஆகியவை ஆகின்றன.
* பசியின்மை * வயிற்று வலி- வாந்தி * வயிற்றுப் போக்கு *மலச்சிக்கல் * உடல் எடை கூடாது இருத்தல் * அடிக்கடி அழுதல் ஆகியவை ஆகும்.
* வயிற்று எரிச்சல் * அடிக்கடி ஏப்பம் * வாயுத் தொல்லை * வயிற்று வலி * மலச்சிக்கல் அல்லது வயிற்றுப் போக்கு * உடல் சோர்வு ஆகியவை ஆகும்.
குழந்தைகளுக்கு முதலில் கைகளை சோப் கொண்டு கழுவும் பழக்கத்தினை ஏற்படுத்தி உள்ளோமா? சுத்தமான குடிநீர் அவசியம். வீட்டில் சமைத்த உணவு அவசியம். ஜங்க் உணவுகளை தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகளை கழுவி கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான தடுப்பு ஊசிகளை சரியான நேரத்தில் தவறாமல் போட வேண்டும்.
பெரியவர்கள்- நேரத்திற்கு உணவு சாப்பிட வேண்டும். புகை, மது இவற்றினை தவிர்க்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி அவசியம். மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். மருத்துவ ஆலோசனை இன்றி எந்த மருந்தும் எடுத்துக் கொள்ள கூடாது
மருத்துவ ஆலோசனைபடி சிகிச்சை பெறுதல். வயிற்று போக்கு இருந்தால் ஓ.ஆர்.எஸ். மற்றும் போதிய திரவங்கள். தேவையான போது பிரோபயாடிக்ஸ், மலச்சிக்கலுக்கு நார் சத்து மற்றும் தண்ணீர் அதிகரித்தல். குடல் தொற்று இருந்தாலும் அதற்கான சிகிச்சை பெறுதல் ஆகியவை அவசியம்.
மலத்தில் ரத்தம், அதிக காய்ச்சல், கடுமையான வயிற்று வலி, தொடர் வாந்தி, உடல் நீரிழப்பு, சோர்வு ஆகியவை ஆகும்.
கீரை வகைகள், காய்கறிக், பழங்கள், முழு தானியங்கள், மோர், பருப்பு வகைகள், போதிய தண்ணீர் ஆகியவை ஆகும்.
அதிக எண்ணை, காரம், குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக இனிப்பு, துரித உணவுகள்.
தினசரி பழக்கமாக- தினம் 7-8 மணி நேரம் தூங்க வேண்டும். காலை உணவை தவிர்க்க கூடாது. தினமும் குறைந்தது 20 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும். மன அமைதிக்காக தியானம் மற்றும் யோகா செய்யலாம். போதுமான அளவு நீர் குடித்தல், உணவை நன்கு மென்று சாப்பிடுதல், அதிகமாக உண்ணாமல் அளவோடு உண்ணுதல், சுகாதார கழிப்பறை பழக்கங்களை பின்பற்றுதல் ஆகியவற்றினைச் செய்ய வேண்டும்.
ஆக குடல் ஆரோக்கியம் என்பது ஒட்டு மொத்த உடல் நலத்தின் அடிப்படையே. மேலும் நமது குடலில் சுமார் 100 டிரில்லியனுக்கும் அதிகமான நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. இவை பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சைகள் மற்றும் பிற நுண்ணுயிர்களை உள்ளடக்கியவை. இவை அனைத்தும் சேர்ந்து குடல் நுண்ணுயிர் சமூகம் என அழைக்கப்படுகின்றன.
எல்லா பாக்டீரியாக்களும் தீங்கு விளைவிப்பவை அல்ல. பெரும்பாலான நன்மை தரும் பாக்டீரியாக்களும் உள்ளன.
* உணவை நன்கு செரிக்க உதவுகின்றன.
* வைட்டமின் கே மற்றும் பி வைட்டமின்களை உருவாக்க உதவுகின்றன.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
* தீங்கு விளைவிக்கும் கிருமிகளின் வளர்ச்சி தடுக்கப்படுகின்றன.
* குடல் சுவர் பாதுகாக்கப்படுகின்றது.
* உடலில் ஏற்படும் வீக்கங்கள் குறைய உதவுகின்றன.
* உடல் எடை, ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்க உதவுகின்றது.
குடலில் நல்ல பாக்டீரியாக்களின் அளவு குறைந்தால் செரிமான கோளாறுகள், ஒவ்வாமை, உடல் பருமன், நீரிழிவு மற்றும் சில மனநல பிரச்சினைகளும் அதிகரிக்கலாம்.
புரோபயாடிக்ஸ்-புரோபயாடிக்ஸ் என்பது உடலுக்கு நன்மை அல்லது மருந்து வடிவில் எடுத்துக் கொள்ளலாம்.
தயிர், மோர், வீட்டில் தயாரிக்கும் புளித்த உணவுகள், இட்லி, தோசை போன்ற புளித்த உணவுகள்.
* குடலில் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்யும்.
* வயிற்று போக்கிற்குப் பிறகு குடல் ஆரோக்கியத்தினை மீட்டெடுக்கச் செய்யும்.
* ஆன்ட்டி பயாடிக் மருந்துகளுக்குப் பிறகு குடல் சமநிலையை மேம்படுத்தும்.
* ஐ.பி.என்-நோயாளிகளில் சிலருக்கு வயிறு உப்பிசம் மற்றும் வயிறு வலியினை குறைக்க உதவும்.
* நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.
பிரீபயாடிக்ஸ்- பிரீபயாடிக்ஸ் என்பது நன்மை தரும் குடல் பாக்டீரியாக்களுக்கு உணவாக செயல்படும் நார்சத்தாகும்.
* வாழைப்பழம் * பூண்டு * வெங்காயம் * ஓட்ஸ் * முழு தானியங்கள்* சோயாபீன்ஸ் * பருப்பு வகைகள் * ஆப்பிள் இவை பிரீபயாடிக்ஸ் உணவுகள்.
* நல்ல குடல் பாக்டீரியா வளர்ச்சியினை ஊக்குவிக்கின்றன. * செரிமானத்தை மேம்படுத்துகின்றன.
* மலச்சிக்கலை குறைக்கின்றன. * நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படுகின்றது.
ஐ.பி.என்- இது குடலின் செயல்பாட்டில் ஏற்படும் நீண்ட கால கோளாறு. இதில் குடலில் நிரந்தர சேதம் ஏற்படாது. ஆனால் அறிகுறிகள் நீண்ட காலம் தொடரலாம்.
* வயிற்றுவலி * வயிறு உப்பிசம் * மலச்சிக்கல் * வயிற்றுப் போக்கு * சிலருக்கு இவை மாறி மாறி ஏற்படலாம்.
* மன அழுத்தம் * குடல் இயக்கத்தில் மாற்றம் * குடல் நுண்ணுயிர் சமநிலை பாதிப்பு * சில உணவுகள்.
உணவுக்கட்டுப்பாடு, மன அழுத்த மேலாண்மை, போதிய நார்சத்து, தேவையான போது மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள், சிலருக்கு புரோபயாடிக்ஸ் பலன் அளிக்கலாம்.
இது குடலில் நாட்பட்ட அழற்சியை ஏற்படுத்துவது. கிரோன்ஸ் நோய், அல்சரேட்டிங் கொலைட்டிஸ் என இதனை வகைப்படுத்துவர்.
தொடர்ந்து வயிற்றுப் போக்கு, மலத்தில் ரத்தம், வயிற்று வலி, உடல் எடை குறைதல், சோர்வு, காய்ச்சல் ஆகியவை ஆகும். ஐ.பி.டி. என்பது தொடர்ச்சியான சிகிச்சை வேண்டப்படுவது.
இவை இரண்டும் ஒன்றோடொன்று தொடர்பு உடையவை. குடலில் வாழும் நுண்ணுயிர்கள் மூளையின் செயல்பாட்டையும் பாதிக்கின்றன. அதேபோல் மன அழுத்தமும் குடலின் செயல்பாட்டை மாற்றுகிறது. மன அழுத்தம் ஏற்பட்டால் வயிற்று வலி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படலாம். பதட்டம், மனச்சோர்வு உள்ளவர்களுக்கு ஐ.பி.எஸ். பாதிப்பு அதிகமாக காணப்படு கின்றது. நல்ல குடல் ஆரோக்கியம் மன நலத்தை மேம்படுத்தும்.
தினமும் நார்சத்து உள்ள உணவை உட்கொள்ள வேண்டும். தயிர், மோர், பிரீபயாடிக் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். போதுமான தண்ணீர் குடிப்பதும், உடற் பயிற்சி செய்வதும் அவசியம். குடல் ஆரோக்கியம் என்பது நோய் எதிர்ப்பு சக்தி. உடல் நலம், மன நலம் ஆகிய அனைத் திற்கும் அடித்தள மாகும். சத்தான உணவு முறையும் நீண்ட கால ஆரோக்கி யத்திற்கு இன்றியமையாதவை.