சனிக்கு திரிகோணத்தில் புதன் இருந்தால் ஜாதகர் சென்ற பிறவியில் கல்வி கூடங்களை நிறுவுதல், வித்யா தானம் செய்தல், மரம் நடுதல், விஷ்ணு ஆலயங்களை பராமரித்தல், நண்பர்களுக்கு உதவுதல், பூமி தானம் செய்தல், நேர்மையான தொழில் போன்ற புண்ணிய செயல் செய்தவர். இதன் பலனாக இந்த பிறவில் கல்வியில் சிறந்து விளங்குதல், நண்பர்களின் அன்பு, ஆதரவு, நல்ல நண்பர்கள், தொழில் மேன்மை, தொழில் கூட்டாளி ஆதரவு நிலபுலன் சேர்க்கை, தாய் மாமன் ஆதரவு கிடைக்கும். சனி, புதன் சம சப்தம பார்வை புதனுக்கு அடுத்து சனி இருந்தால் மேற்கூறிய பலன்கள் அசுபமாக நடக்கும். அதற்கு பரிகாரமாக விஷ்ணு வழிபாடு, பச்சை பயிறு சுண்டல் தானம், சக்ரத்தாழ்வார் வழிபாடு நல்ல பலன் தரும்.
சனிக்கு திரிகோணத்தில் குரு இருந்தால் ஜாதகர் சந்நியாசியாக இருந்து இருப்பார் அல்லது ஆலயத் திருப்பணி செய்தல், குரு சேவை செய்தல், சத்தியாசிகளை உபசரித்தல், குழந்தைகளுக்கு ஆசிரமம் கட்டுதல், மதபோதனை செய்தல் போன்ற சமூக சேவை செய்து இருப்பார். இதன் பலனாக இந்த பிறவியில் சமுதாயத்தில் நல்ல மதிப்பு மரியாதை சகல சவுபாக்கியமும் தேடி வரும். ஜனன கால ஜாதகத்தில் சனி, குரு சம சப்தம பார்வை குருவிற்கு அடுத்து சனி இருந்தால் வாழ்வில் ஏற்ற இறக்கம் மிகுதியாகும். குரு சனியை நோக்கி சென்றால் முன்னேற்றக் குறைவு அதிகமாகும். இதற்கு பரிகாரமாக சித்தர் ஜீவ சமாதி வழிபாடு, பெரியோர்களின் ஆசி பெறுதல் சாதுக்கள் தரிசனம் நல்ல பலன் தரும்.
சனிக்கு திரிகோணத்தில் சுக்கிரன், சுக்கிரன் சனி இணைவு, சம சப்தம பார்வை, சுக்கிரனுக்கு அடுத்து சனி, சனி அடுத்து சுக்கிரன் இருந்தால் சென்ற பிறவியில் பெண்களை மதித்தல், மனைவி, உடன் பிறந்த சகோதரிகளின் அன்பை பெற்றவர், பெண் தெய்வ உபாசகர், தான தர்மம் செய்தவர். இதன் பலனாக இந்த பிறவியில் பொன், பொருள், வீடு, மனை வாகன யோகம், அழகு ஆடம்பர பொருள் சேர்க்கை, விலையுயர்ந்த ஆபரண சேர்க்கை மிகும். சுக்கிரன் சனி சம்பந்தம் எந்த வகையில் இருந்தாலும் சுப பலன் மிகும். கால தாமத திருமணத்தை தரும். திருமணத் தடை மிகுதியாக இருந்தால் அம்மன் வழிபாடு நல்ல பலன் தரும்.
சனிக்கு திரிகோணத்தில் ராகு இருந்தால் ஜாதகர் சென்ற ஜென்மத்தில் உழைத்த ஊதியத்தை கொடுக்காமல் ஏமாற்றி பிழைத்தல், திருடுதல், செய்வினை, ஊழல் அழிவு காரியங்களில் ஈடுபடுதல், முறைகேடான பெண்கள் சம்பந்தம், சூதாடுதல் போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபட்டு இருப்பார்.
இதன் பயனாக இந்த ஜென்மத்தில் ஜாதகருக்கு சிறப்பான தொழில் அமையாது. உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் அமையாது அல்லது மிக உயர்த்த நிலைக்கு ஏற்றி மிக தாழ்ந்த நிலைக்கு தள்ளும். ஜாதகருக்கு முன்னேற்றம் இன்மை இருக்கும்.
வெளிநாட்டில் சென்று அடிமைப்படும் நிலை, வெளிநாடு சென்று திரும்ப வர முடியாத நிலை அல்லது சிறை தண்டணை, மனநலக் குறையை அனுபவிக்க நேரும். ஜனன ஜாதகத்தில் சனிக்கு திரிகோணத்தில் ராகு சனி, ராகு சேர்க்கை இருப்பவர்கள் செய்ய வேண்டிய
பரிகாரம்: சனிக்கிழமை ராகு வேளையில் பைரவருக்கு வில்வ அர்ச்சனை செய்ய வேண்டும். ஞாயிற்று கிழமை பைரவருக்கு ராகு வேளையில் உளுந்து வடை மாலை அணிவித்து வழிபட வேண்டும்.
சனிக்கு திரிகோணத்தில் கேது இருந்தால் பொய் வழக்கு போடுதல் ஜாதகர் போலி டாக்டர், போலி மருந்து விற்றல், குரு துரோகம் செய்தல், சாதுக்களை அவமதித்தல், தான தர்மம் செய்பவரை தடுத்தல், துஷ்ட தேவதைகளை வழிபடுதல், மிருகங்களை வதை செய்தல், உழைக்காமல் உண்ணுதல், அடுத்தவர் வாழ்க்கையை கெடுப்பது போன்ற செயல்களை செய்வார். இதன் பலனாக இந்த ஜென்மத்தில் ஜாதகரின் எல்லா செயல்களும் தடை தாமதப்படும். நிலையான தொழில் இருக்கும். தரித்திரம் ஏற்படும். வம்பு, வழக்கு தேடி வரும். திருமணத் தடை மிகும். விரக்தியில் சந்நியாச நிலையில் வாழ்வார் அல்லது சந்நியாசி ஆகிவிடுவார். மன சஞ்சலம் மிகும். ஜனன ஜாதகத்தில் சனிக்கு திரிகோணத்தில் கேது இருப்பவர்கள் அல்லது சனி, கேது சேர்க்கை இருப்பவர்களுக்கு ஆஞ்சநேயர் வழிபாடே தீர்வு. சனிக்கு திரிகோணத்தில் உள்ள கிரகம் அறிந்து அதற்கு முறையான வழிபாடு செய்த பின்பு 3 பெரும் கடன்களை தீர்க்க வேண்டும். பொருள் கடன் மட்டும் கடனாகாது கடமையைச் செய்யாமல் விடுதலும் கடனே.
தேவகடன் என்பது தெய்வ சிந்தனை இல்லாமல் இருப்பது, குல தெய்வத்தை வழிபடாமல் இருப்பது,கோயில் திருப்பணியை தொடங்கிவிட்டு பாதியில் விட்டுவிடுவது, நேர்த்திக்கடன்களை செய்யாமல் விடுவது, தவிர கோவில் சொத்து , சிலை, வருமானத்தை திருடுதல் போன்ற செயல்களை ஜாதகர் அல்லது ஜாதகரின் முன்னோர்கள் செய்து இருந்தால் அதை முறையாக சரி செய்ய வேண்டும்.
இந்த கலிகாலத்தில் நிஜமான ரிஷிகள் மிகக்குறைவாக இருக்கின்றனர். அதனால் ரிஷி கடன் ஏற்படும் வாய்ப்பு குறைவு . ஜாதகத்தில் ரிஷிக்கள் சாபம் இருந்தால் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம்,தண்ணீர் தானம் செய்தல்,ஆன்மீகமடங்களுக்கு உதவி செய்தல், ரிஷிக்கள், சாதுக்களின் ஆசி பெற வேண்டும்.
மறைந்த முன்னோர்களுக்கு முறையான திதி தர்ப்பணம் செய்யாதவர்கள், வாழும் காலத்தில் பெற்றோர்களின் சாபத்தை வாங்குவது போன்றவைகளால் ஏற்படும். இதனால் 7 தலைமுறைகள் பாதிக்கப்படும். பித்ருக்கடன்கள் பல்வேறு வழியாக வருவதால் பரிகாரங்களும் பல்வேறு விதமாக இருக்கின்றன. அவரவர் ஜாதகம் பார்த்து உரிய பரிகாரம் பூஜை,யாகம் செய்ய வேண்டும்.
கர்ம வினைகளை தீர்க்க பலர் பல ஆலயங்களுக்கு சென்றும், பலவிதமான பரிகாரங்களை செய்தும் கர்மவினை தீரவில்லை என்று வேதனைப்படுவர்கள் இந்த கட்டுரையில் கூறிய முறையில் பரிகாரம் செய்து சரணாகதி அடைந்தால் கர்ம வினை தீரும்.
ஒவ்வொரு பாவத்திற்கும் ஒவ்வொருவிதமான பரிகாரங்கள் செய்ய வேண்டும். அதே சமயம் திரும்பவும் அதே பாவங்களை செய்யாமலிருக்க வேண்டும். அத்துடன்தினமும் சிவபுராணம் படித்து இறைவனை சரணாகதி அடைந்தால் கர்ம வினை நீங்கும்.
பூமியில் ஜனனமாகும் அனைத்து உயிர்களும் பிறக்கும் போது கர்ம பந்தம் அல்லது கர்மவினையை மட்டுமே தன்னுடன் எடுத்து வருகிறது. அதே போல் பூமியை விட்டுச் செல்லும் போதும் கர்ம பந்தம் அல்லது கர்மவினையை மட்டுமே தன்னுடன் எடுத்துச் செல்ல முடியும். பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில் உள்ள இடைபட்ட காலத்தில் மட்டுமே கர்மவினையை கலைந்து கர்ம பந்தத்தை அதிகரிக்கச் செய்ய முடியும். ஒரு மனிதனுக்கு வினை அதிகரித்தாலும் குறைந்தாலும் தன்னுடைய கர்மப் பதிவில் தொடர்புடைய உயிர், பொருள் காரகத்துவங்களிடம் மட்டுமே வாழ்நாள் இருக்கும். தோஷம் என்றால் ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலவரம் அல்லது கிரகங்களின் சேர்க்கையால் ஜாதகரின் வாழ்வில் நிகழும் சுப அசுப பலன்களாகும். ஒரு சில தோஷங்கள் ஜாதகரின் வாழ்க்கையில் பாதிப்பை தரலாம் ஒரு சில தோஷங்கள் ஜாதகரின் வாழ்க்கையில் பாதிப்பே தராமல் போகலாம்.
மேலே கூறிய அனைத்து கர்மவினை சார்ந்த பாதிப்புகளும் தசா புத்தி காலங்களில் மட்டுமே ஜாதகரை வந்து சேரும். ஒருவர் தன் வாழ்நாளில் நற்பலன்களை அனுபவிக்க, நிகழ்காலத்தில் கட்டுப்பாட்டுடன் வாழ வைக்கும் முயற்சியாகவே நம் முன்னோர்கள் ஆன்மீகம் மற்றும் மதம் சார்ந்த விஷயங்களை உபதேசித்து இருக்கிறார்கள். தவறு செய்வது மனித இயல்பு. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எவ்வளவு தவறு செய்தாலும் “என் மனதால் கூட யாருக்கும் எந்த கெடுதலும் செய்தது இல்லை”என்பதையே கூறுகிறார்கள். இதற்கு தான் செய்வது. தவறு என்ற அறியாமையும் ஒரு காரணம். தன் தவறை யாரும் பார்க்கவில்லை, சாட்சி இல்லை என்று தவறை மறைக்க முயற்சி செய்வது மற்றொரு காரணம்.
தவறை மறைக்க முயற்சிப்பவர்களுக்கு எந்த பரிகாரம், வழிபாடும் பலன் தராது. சிறு தவறு முதல் பெரும் குற்றங்கள் வரை மனித வாழ்வின் அனைத்து சம்பவங்களும் கால பகவான் எனும் கண்காணிப்பு கேமராவால் படம் பிடிக்கப்பட்டு காலப் பதிவேட்டில் பதியப்படும் என்பதை உணர்ந்தவர்கள் சரணாகதி அடைந்து இறைவனின் அருட் கருணையால் கர்ம வினை நீங்கி சுப வாழ்வு வாழ்கிறார்கள்.
முன் வினைகளின் விளைவுகள் தான் மனிதர்களை துரத்திக் கொண்டே வருகின்றன. மனிதன் முக்தி அடைவதற்கும் பிறவாப் பெருநிலை அடைவதற்கும் சஞ்சித கர்மா முற்றிலும் சரி செய்யப்பட்டு இருக்க வேண்டும். பிறவி எடுத்து எடுத்து சரி செய்வது முடியாத காரியம். சரணாகதி எனும் வழிபாடே சஞ்சித கர்மாமிற்கு முற்று புள்ளி வைக்க பிரபஞ்சத்தல் வழங்கப்பட்ட அருட்கொடையாகும். அது போலத்தான் கடந்தகால ‘கர்மாவை’ ஒட்டியே, தற்போதைய வாழ்வும் அமைந்து விடும். அதனால் நமது செயல்கள் நன்மையை விளைவிப்பதாக இருக்க வேண்டும். நன்மையை விளைவிக்கும் செயல்களைச் செய்வதற்கு, முதலில் இறைவன் மேல் அன்பைச் செலுத்த வேண்டும். இரண்டாவதாக பாவச் செயல்களை செய்வதற்கு பயப்பட வேண்டும். இறுதியாக நாம் வாழுகின்ற சமூகத்தில் ஒழுக்க நெறியுடன் வாழ வேண்டும்.
இந்த மூன்றையும் கடைப்பிடிக்க ஆரம்பித்தால், புதிய கர்ம வினைகளை சேர்த்துக் கொள்ளாமல் இருக்க முடியும். கடவுளின் மீதான அன்பு, பாவச் செயல்களைத் தவிர்த்தல் - ஒழுக்கம், இவை மூன்றும் ஒன்றுக் கொன்று தொடர்புடையவைகள். இவைகளைக் கடைப்பிடிப்பதற்கு, இறைவனின் மீதான பக்தியே உதவி செய்யும். கால சக்கரத்தின் பிடியில் சிக்கிச் சுழலும் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையின் பிடியில் இருந்து வெற்றி பெற வேண்டும் என்ற ஆவலில் விதிப்பயனை மீறி சில திட்டமிடுதலை செய்து வெற்றி பெற சாஸ்திரத்தில் சில வழிபாட்டு பூஜை முறைகள் கொடுக்கப் பட்டுள்ளது. முழுமையான ஆர்வம் மற்றும் ஈடுபாட்டுடன் வழிபாட்டு முறைகளை கையாண்டால் பரிபூரண பலன் கிடைக்கும். கடுமையான கர்மதோஷ பாதிப்பு இருப்பவர்கள்
1. தினமும் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.
2. தினமும் பட்சிகள், விலங்குகளுக்கு உணவிட வேண்டும்.
3. உடம்பையும், உயிரையும் வளர்ப்பது உணவு. உங்களின் ஜென்ம நட்சத்திர நாளில் உண்மையில் பசித்தவருக்கு அன்னதானம் தொடர்ந்து செய்து வர பிரச்சினை பனிபோல் விலகும்.
4. சித்தர்கள் ஜீவ சமாதி வழிபாடு செய்வது கைமேல் பலன் தரும்.