சிறப்புக் கட்டுரைகள்

கர்ம வினையை தீர்க்கும் பரிகாரங்கள்

பல ஜாதகங்களில் பாவ, புண்ணியங்கள் கலந்த இருக்கும்.

கர்ம ஸ்தானம்

கர்மா என்றால் வினைப்பயன். ஒருவர் செய்யத நல்ல தீய செயல்களின் பிரதிபலன். லக்னத்திற்கு 10ம்மிடம் கர்மஸ்தானம். பாக்கியஸ்தானத்தில் பதிவாகியுள்ள நல்ல தீயவினைகளுக்கான பலன்களின் இந்த ஜென்மத்தில் ஜாதகர் அனுபவிக்க போகும் பலன்களை எடுத்து உரைப்பது 10-ம் இடமாகும். கால புருஷ 10-ம் அதிபதியான சனியே கர்மக் காரகன் ஆவார். ஒருவரின் கர்ம வினையை முழுமையாக அனுபவிக்க உதவுபவர். ஒருவரின் வாழ்வில் ஏற்படும் எல்லா சம்பவங்களையும் ரெக்காடிங் செய்து தனக்குள் பதிவு செய்து தக்க காலகட்டத்தில் பலனை வழங்குபவர். மனிதர்களின் அனைத்து கர்ம வினையும் சனி கிரகத்தில் தான் பதிவாகி இருக்கும்.

கர்ம வினை

இவர் கர்ம வினையை நிகழ்த்த உதவுபவர்கள் இவரின் பிரதிநிதியான ராகு/கேதுக்கள். முன் ஜென்மத்தில் ஒருவர் செய்த கர்மா என்ன என்பதை கேது சுட்டிக் காட்டும். முன் ஜென்மத்தில் செய்த கர்மாவிற்கு என்ன பலன் என்பதை ராகு சுட்டிக்காட்டும். முற்பிறவில் செய்த பாவ/புன்ணியங்களுக்கு ஏற்ப பலனை பெற்றுத் தருபவர் சனி பகவான்.

மனிதன் தன் வாழ்நாளில் மூன்று வகையான கர்மவினைகளை அனுபவிக்கிறான். அவை சஞ்சித கர்மம்: ஒரு கரு உருவாகும் போதே உடன் உருவாவது. அதாவது தாய், தந்தை மற்றும் முன்னோர்கள் பல ஜென்மங்களில் செய்த பாவ புண்ணியத்தால் இந்த பிறவியில் பற்றிக்கொள்ளும் கர்ம வினையாகும்.

பிராப்த கர்மம்

ஒரு ஆன்மா பல பிறவிகளில் செய்த பாவ புண்ணிய பலன் மூலம் இந்த பிறவியில் கிடைக்க கூடிய நன்மை தீமையாகும். இதையே வேறு விதமாக சொன்னால் பிராப்தம், விதி, கொடுப்பினை என்று கூறலாம். இந்த கர்மாவால் வரும் பலனையும் இந்த பிறவிலேயே அனுபவிக்கவேண்டும்,

ஆகாமிய கர்மம்: மேற்கூறிய இரண்டு கர்மாக்களை கழிக்க செய்யும் செயல்கள் முலம் இப்பிறவியில் வாழும் காலத்தில் ஆசைகளால் பிறருக்கு செய்யும் நன்மை தீமைகளால் வருவது, இவ்விதமாக மூன்று வகையான கர்மாக்கள் அனைவரையும் சூழ்ந்துள்ளன. இந்த கர்மவினைகளில் இருந்து யாரும் தப்ப முடியாது.

கடன்கள்

மனிதன் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், குழப்பங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்கள், கடன்கள், பிரிவினைகள், விபத்துகள், நோய்கள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் மேலே கூறிய கர்ம வினை தாக்தால் வருபவை.

பல பிறவிப் பாவம் என்று கூறுகிறார்களே பல பிறவியில் ஆத்மா என்ன பாவம் செய்தது என்பதை அறிய முடியுமா?

கர்மக்காரன் சனி என்றால் சனிக்கு திரிகோணத்தில் உள்ள கிரகங்களே முன் ஜென்மங்களில் செய்த கர்ம வினையை உணர்த்தும் கிரகங்கள். சனிக்கு திரிகோணத்தில் அதிக கிரகங்கள் இருந்தால் பாவம் அதிகம் செய்தவர்கள் என்றும் குருவுக்கு திரிகோணத்தில் அதிக கிரகம் இருந்தால் புண்ணியம் அதிகம் செய்தவர்கள் என்றும் உணரலாம்.

செவ்வாய்

கிரகங்களை சுப கிரகம், அசுப கிரகம் என இரண்டாக வகைப்படுத்தலாம். குரு, சுக்கிரன், புதன் சுப கிரகங்களாகும். சூரியன், சந்திரன், செவ்வாய், சனி, ராகு, கேது அசுப கிரகங்களாகும். கர்மக்காரகன் சனிக்கு திரிகோணத்தில் சுப கிரகங்களான குரு, சுக்கிரன், புதன் இருந்தால் ஜாதகர் கணக்கிலடங்கா புண்ணியம் செய்தவர் என அறியலாம். சனிக்கு திரிகோணத்தில் சுப, அசுப கிரகங்கள் என கலந்து இருந்தால் ஜாதகர் பாவ, புண்ணியம் இரண்டும் செய்தவர் என அறியலாம். பல ஜாதகங்களில் பாவ, புண்ணியங்கள் கலந்த இருக்கும்.

சனிக்கு திரிகோணத்தில் பாவ கிரகங்கள் மட்டும் இருந்தால் அளவிட முடியாத பாவங்களை செய்தவர் என்பதை அறிய முடியும். சனிக்கு திரிகோணத்தில் நிற்கும் கிரகங்கள் மூலம் என்ன பாவம் செய்து இருக்கலாம் என காணலாம்.

'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

சூரியன்

சனிக்கு திரிகோணத்தில் சூரியன் நின்றால் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய தவறியது, கொடுமை படுத்துவது, பொறுப்புகளை தட்டிக் கழித்தல், ஆண் வாரிசுகளை சரியாக கவனிக்காமல் விட்டு விடுதல், ராஜ துரோகம், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, சிவ ஆலயங்களை அசுத்தம் செய்தது, ஒருவருக்கு கண் பார்வை போக காரணமாக இருந்தது, முதலாளிக்கு துரோகம் செய்தது போன்ற பாவங்களை செய்து இருக்கலாம்.

ஜனன கால ஜாதகம்

அதன் பலனாக இந்த பிறவியில் தந்தையின் ஆதரவு கிடைக்காமல் போவது, தந்தை மகன் கருத்து வேறுபாடு, பார்வைக் குறைபாடு ஆண் வாரிசு இன்மை, அரச தண்டனை அல்லது அரசின் ஆதரவு இன்மை, முதலாளியால் தொல்லை அல்லது உழைப்பிற்கேற்ற ஊதியம் இன்மை அல்லது சரியான தொழில், வேலை அமையாமல் போவது போன்ற அசுப பலன் மிகுதியாக இருக்கும். ஜனன கால ஜாதகத்தில் சனிக்கு திரிகோணத்தில் சூரியன் இருந்தால் அல்லது சூரியன், சனி இணைவு இருந்தால் செய்ய வேண்டிய பரிகாரம்:

தந்தையை நல்ல முறையில் பராமரித்தல், தந்தை ஸ்தானத்தில் இருப்பவருக்கு வேண்டிய உதவிகள் செய்தல், பார்வை குறைபாடு உள்ளவர்களின் வைத்தியத்திற்கு உதவுதல், சிவ ஆலயங்களில் உலவாரப் பணி செய்தல், சிவ ஆலயங்களில் விளக்கு ஏற்ற எண்ணெய் தானம் செய்தல் போன்ற புண்ணிய செயல்களை செய்தால் சுப பலன் மிகும். சூரியன் சனி சம்பந்தத்தால் உயிரணு குறைபாடு இருந்து குழந்தை பிறக்க வில்லை என்றால் தொடர்ந்து 1 வருடம் கோசாலையை பராமரிக்க வேண்டும் அல்லது தினமும் ஒரு லக்னம் அல்லது 2 மணி நேரம் கோசாலையில் அமர்ந்து சிவபஞ்சாட்சரம் பாராயணம் செய்ய வேண்டும்.

சந்திரன்

சனிக்கு திரிகோணத்தில் சந்திரன் இருந்தால் தாயை பராமரிக்க தவறியது, இழிவு படுத்தியது, கலப்படமான உணவுப் பொருளை விற்றது, ஒருவருக்கு இடு மருந்து செய்தல், அம்மன் உபாசகர்களை அவமதித்தல், அம்மன் கோவிலை அசுத்தப்படுத்துதல், மாற்றான் மனைவி மேல் ஆசைப்படுதல், பெண் குழந்தைகளை கவனிக்காமல் விட்டு விடுதல், பெண்களை அவமதித்தல், கண் பார்வை கெட காரணமாக இருத்தல், விளை நிலங்களை நாசப்படுத்துதல் போன்ற பாவங்களை செய்த குற்றத்தின் பதிவாகும். இதன் பலனால் இந்த பிறவியில் தாய் அன்பு கிடைக்காமல் போவது, பெண் குழந்தையின்மை, பெண்களால் அவமானம், வம்பு, வழக்கு, உணவு ஒவ்வாமை, செரிமானக் கோளாறு, அடிக்கடி ஏற்படும் இடமாற்றம், அலைச்சல் மிகுந்த வேலை, வீண் விரயம், மன உளைச்சல், திருமணத்தடை போன்ற அசுப பலன் மிகுதியாகும். ஜனன கால ஜாதகத்தில் சனிக்கு திரிகோணத்தில் சந்திரன் அல்லது சனி, சந்திரன் சம்பந்தம் இருப்பவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்.

தாயை பராமரித்தல், வயதான பெண்களுக்கு உதவுதல், அம்மன் வழிபாடு, உணவு தானம் செய்ய வேண்டும். பிரதோச காலங்களில் மாவிளக்கு செய்து சிவனுக்கு நெய் தீபம் ஏற்ற சுப பலன் மிகுதியாகும். தாய், தந்தை இல்லாமல் பிறப்பு இல்லை. தாய், தந்தையின் ஆசியே பல பிறவி பாவகங்களை கடக்க உதவும் எளிய வலிய பரிகாரம்.

செவ்வாய்

சனிக்கு திரிகோணத்தில் செவ்வாய் இருந்தால் சகோதரனை ஏமாற்றுதல், சகோதரர்களின் சொத்துக்களை அபகரித்தல், மற்றவர்களின் பொருளை அபகரித்தல், கால்நடைகளை துன்புறுத்துதல், கொலை செய்தல், பிறரை ஏமாற்றி பணம் பறித்தல், வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றுதல், பெண்களை பலவந்தமாக கற்பழித்தல், வீண், வம்பு சண்டைக்கு போகுதல், கணவன், மனைவி பிரிவினைக்கு காரணமாக இருத்தல் போன்ற பாவங்களை செய்த குற்றத்தின் பதிவு. இதன் பலனாக இந்த பிறவியில் சகோதரர்களின் ஆதரவு கிடைக்காமை, சொத்துக்கள் விரயம், சொத்துக்கள் மூலம் வம்பு வழக்கு, சொத்து பறிபோகுதல், சரியான தொழில் உத்தியோகம் இன்மை, கடன் தொல்லை, ரத்த சம்பந்த உறவினர்கள் பகை ,ரத்த சம்பந்தமான நோய் உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாமை வம்பு வழக்கு தேடி வருதல் பணவிரயம், கணவன் மனைவி பிரிவினை ஏற்படும். ஜனன கால ஜாதகத்தில் சனிக்கு திரிகோணத்தில் செவ்வாய் அல்லது செவ்வாய் சனி சம்பந்தம் இருப்பவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்:

பூமி தானம், உடன்பிறந்தவர்களுக்கு உதவி செய்தல், ரத்த தானம், பிரிந்த கணவன் மனைவியை சேர்த்து வைத்தல், மற்றும் முருகன் வழிபாடு செய்ய சுப பலன் மிகும்.

சனி, செவ்வாய் சம்பந்தத்தால் வீடு வாகனம் அமைவதில் தாமதம், சொத்து தொடர்பான பிரச்சினை இருந்தால் செவ்வாய்கிழமை ராகு வேளையில் முருகனுக்கு மாதுளை கலந்த தயிர் சாதம் நைவேத்யம் செய்ய வேண்டும். கணவன் மனைவி பிரிவினை, கருத்து வேறுபாடு மறைய செவ்வாய் கிழமை ராகு வேளையில் சிவப்பு வஸ்திரம், அரளி மாலை அணிவிக்க வேண்டும்.

இதன் தொடர்ச்சியை வரும் வாரம் பார்க்கலாம்....

SCROLL FOR NEXT