சிறப்புக் கட்டுரைகள்

மருத்துவம் அறிவோம்- உடல் அறிகுறிகள்!

உணவாக கஞ்சி, இளநீர், பழச்சாறு, ஆப்பிள் ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த குறிப்புகள், இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் உடல் அறிகுறிகள் அவை குறிக்கும் நோய்கள் பற்றி ஒவ்வொருவரும் ஓரளவு அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

காய்ச்சல்

இது சர்வ சாதாரணமாக கூறப்படும் ஒரு வார்த்தை. ஆயினும் வைரஸ், பாக்டீரியா, தொற்று, டெங்கு, டைபாய்டு என காரணங்கள் இருக்கலாம்.

* போதிய ஓய்வு, கூடுதல் நீர், மருத்துவ ஆலோசனைப்படி மருந்து அவசியம்.

* உணவாக கஞ்சி, இளநீர், பழச்சாறு, ஆப்பிள் ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம்.

* மூச்சுத் திணறல், குழப்பம் என இருந்தால் உடனடி மருத்துவரை அணுக வேண்டும்.

தலைவலி காரணங்கள்: மன அழுத்தம், மைக்ரேன், சைனஸ், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை இருக்கலாம்.

* ஓய்வு போதிய அளவு நீர், தேவை எனில் வலி நிவாரணி அவசியம்.

உணவு

அதிக காபின் வேண்டாம். உடலில் நீர் வற்றாமல் இருக்க வேண்டும்.

எச்சரிக்கை

திடீர் கடுமையான தலைவலி, கை அல்லது கால் பலவீனம் இருந்தால் உடனடி மருத்துவரை அணுகவும்.

தலை சுற்றல்

குறைந்த ரத்த அழுத்தம், ரத்த சோகை, காதின் சமநிலை கோளாறு ஆகியவை காரணமாக இருக்கலாம்.

* உட்கார்ந்து ஓய்வெடுக்க வேண்டும்.

* நீர் அருந்த வேண்டும்.

* இரும்புச்சத்து நிறைந்த உணவு அவசியம்

* மயக்கம், பேச்சு தடுமாற்றம் இருந்தால் உடனடி மருத்துவரை அணுகவும்.

மயக்கம்

காரணங்கள்- குறைந்த சர்க்கரை, இதய நோய், நீர் இழப்பு ஆகியவை ஆகும்.

* படுக்க வைத்து கால்களை உயர்த்தவும்.

* மருத்துவ உதவி பெறவும்.

சோர்வு

* ரத்தசோகை, தைராய்டு குறைபாடு, நீரிழிவு, தூக்கமின்மை போன்றவை பொதுவான காரணங்கள். மருத்துவர் மூலம் காரணத்தினை கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும்.

* புரதம், கீரைகள், பழங்களை உணவில் சேர்க்க வேண்டும்.

உடல் எடை குறைதல்: * நீரிழிவு, தைராய்டு, புற்றுநோய், காச நோய் ஆகியவை காரணங்களாக இருக்கலாம்.

* மருத்துவ மதிப்பீடு அவசியம்.

உடல் எடை அதிகரித்தல்

* தைராய்டு குறைபாடு, அதிக கலோரி, உணவு, உடற்பயிற்சி குறைவு ஆகியவை காரணங்களாக இருக்கலாம்.

* உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருத்துவ ஆலோசனை ஆகியவை தேவை .

பசியின்மை

* கல்லீரல் நோய், தொற்று, மன அழுத்தம் ஆகியவை காரணங்கள். காரணம் அறிந்து சிகிச்சை பெற வேண்டும்.

அதிக பசி

* நீரிழிவு, தைராய்டு அதிக செயல்பாடு ஆகியவை காரணங்கள்.

* ரத்த சர்க்கரை பரிசோதனை, தைராய்டு பரிசோதனை அவசியம்.

அதிக தாகம் காரணங்கள்

* நீரிழிவு, நீரிழப்பு, நீர் அருந்த வேண்டும். மருத்துவ ஆலோசனை பெறவும்.

வாய் உலர்தல்

* காரணங்கள்- நீரிழப்பு, மருந்துகளின் பக்க விளைவு.

* வாய் துர்நாற்றம்

* காரணங்கள்-பல் ஈறுநோய், செரிமான கோளாறு, வாய் சுகாதாரம் சிகிச்சை பெற வேண்டும்.

வாய்ப்புண்

* வைட்டமின் பி12, போலேட், இரும்பு சத்து குறைபாடு இருக்கலாம்.

* ஊட்டச்சத்து, மருத்துவ ஆலோசனை தேவை.

பல் வலி

* பல் சொத்தை, ஈறுநோய், பல் மருத்துவரின் சிகிச்சை தேவை.

* ஈறுகளில் ரத்தக் கசிவு, ஈறு அழற்சி, வைட்டமின் சி குறைபாடு.

* பல் சுத்தம், சிகிச்சை தேவை.

தொண்டை வலி

* வைரஸ், பாக்டீரியா.

* வெந்நீர் உப்பு கொண்டு கொப்பளித்தல்.

குரல் கரகரப்பு

* தொற்று, குறலை அதிகம் பயன்படுத்துதல்.

* குறலுக்கு ஓய்வு, இருமல், சளி, ஆஸ்துமா, காசநோய் காரணத்திற்கேற்ப சிகிச்சை தேவை.

சளி

* வைரஸ், தொற்று, ஒவ்வாமை, நீராவி, ஓய்வு தேவை.

ரத்தத்துடன் இருமல்

* காசநோய், நுரையீரல் நோய்கள், உடனடி மருத்துவ பரிசோதனை அவசியம். மூச்சு திணறல், ஆஸ்துமா, இதய செயலிழப்பு, அவசர மருத்துவ உதவி தேவை.

மார்பு வலி

* மாரடைப்பு, அமில எதிர்ப்பு.

* உடனடி மருத்துவமனை செல்ல வேண்டும். இதயத்துடிப்பு அதிகரித்தல்.

* மன அழுத்தம், தைராய்டு, இருதய கோளாறு, இ.சி.ஜி. உள்ளிட்ட பரிசோதனைகள் தேவைப்படும்.

கால்களில் வீக்கம்

* சிறுநீரக, இதய, கல்லீரல் நோய் காரணம் அறிந்து சிகிச்சை தேவை.

* உயர் ரத்த அழுத்தம், பரம்பரை, உப்பு அதிகம். வாழ்க்கை முறை மாற்றம், மருந்துகள் தேவை.

குறைந்த ரத்த அழுத்தம்

* நீரிழப்பு, ரத்த இழப்பு, திரவங்கள், நீர், மோர், ஜூஸ் போன்றவை எடுத்துக் கொள்ளலாம்.

வயிற்று வலி

அமிலம், குடல் அழற்சி, கற்கள். காரணத்திற்கேற்ப சிகிச்சை தேவை.

நெஞ்செரிச்சல்

கார உணவு, GERD சிறிய அளவு உணவு, மருத்துவ ஆலோசனை தேவை.

வாந்தி

உணவு, நச்சு, கர்ப்பம், தொற்று, ORS, நீர் குடித்தல் முதல் படி சிகிச்சை ஆகும்.

வாந்தியில் ரத்தம்

வயிற்றுப்புண், கல்லீரல் நோய், அவசர சிகிச்சை தேவை.

வயிற்றுப்போக்கு

தொற்று, ORS, திரவங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

மலச்சிக்கல்

நார்ச்சத்து குறைவு, தண்ணீர் மற்றும் நார்ச்சத்து உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

மலத்தில் ரத்தம்

மூலநோய், குடல் பாதிப்பு.

உடனடி மருத்துவ பரிசோதனை

கருப்பு மலம்

மேல் குடல் பாதை ரத்த கசிவு.

மருத்துவ உதவி உடனடி தேவை.

வயிறு உப்புசம்

வாயு, IBS, உணவு முறை மாற்றம் தேவை.

மஞ்சள் காமாலை

கல்லீரல் நோய், உடனடி கவனம் தேவை.

சிறுநீர் எரிச்சல்

சிறுநீர் தொற்று, சிறுநீர் பரிசோதனை. சிகிச்சை தேவை.

அடிக்கடி சிறுநீர் கழிதல்

நீரிழிவு, UTI காரணத்திற்கு ஏற்ப சிகிச்சை தேவை,

சிறுநீரின் ரத்தம்

கல், தொற்று, கடுமையான நோய். உடனடி சிகிச்சை தேவை.

சிறுநீர் கட்டுப்பாடு இல்லாமை

தசை பலவீனம், நரம்பு நோய், மருத்துவ பரிசோதனை, தசை பயிற்சி தேவை.

முதுகு வலி

தசை பிடிப்பு, இழுப்பு, டிஸ்க் பிரச்சினை.

உடற்பயிற்சி, பிசியோதெரபி. கழுத்து வலி, தசை பிடிப்பு, ஸ்பாண்டிலோசிஸ்

உடற்பயிற்சி

மூட்டு வலி, கீழ்வாதம், யூரிக் அமிலம் காரணத்திற்கேற்ற சிகிச்சை பெற வேண்டும்.

சாதா தலைவலி- வைரஸ், அதிக உழைப்பு, ஓய்வு பலன் தரும்.

கை, கால் உணர்வின்மை- நீரிழிவு, நரம்பு பாதிப்பு, வைட்டமின் பி1 குறைபாடு.

நரம்பியல் மதிப்பீடு சிகிச்சை அவசியம்.

கைநடுக்கம்

பார்க்கின்சன் நோய், தைராய்டு காரணத்திற்கு ஏற்ப சிகிச்சை அவசியம்.

வலிப்பு மருத்துவ உதவி பெறுவது முதல் தீர்வு.

தோல் அரிப்பு

ஒவ்வாமை பூஞ்சை கல்லீரல் நோய் காரணத்திற்கு ஏற்ப சிகிச்சை வேண்டும்.

தோலின் சிவப்பு தடிப்பு ஒவ்வாமை வைரஸ் தொற்று மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

முடி உதிர்தல்

இரும்பு சத்து குறைபாடு தைராய்டு மன அழுத்தம். ஊட்டச்சத்தும் சிகிச்சையும் தேவை.

இந்த குறிப்புகள் விழிப்புணர்விற்காக மட்டுமே.

சுய சிகிச்சை கண்டிப்பாக கூடாது.

பணம் தொடர்கிறது.

* தள்ளுபடி என்ற பெயரில் தேவையற்ற பொருட்களை வாங்க வேண்டாம்.

* விலையை விட மதிப்பு முக்கியம்.

* பொறுமை செல்வத்தை உருவாக்குகின்றது.

* பேராசை செல்வத்தை அளிக்கின்றது.

* முதலீட்டிற்கு முன் ஆராய வேண்டும்.

* அபாயங்களை புரிந்து கொள்ள வேண்டும்.

* சட்டபூர்வமான வருமானம் அமைதி தரும்.

* ஒழுக்கம் செல்வத்தின் காவலன்.

* ஒவ்வொரு மாதமும் சேமிப்பை உயர்த்தலாமே.

* பிறருடன் ஒப்பிடவே வேண்டாம்.

-தொடரும்