பணம்- இந்த வார்த்தையினை சொன்னாலே ஒரு புன்னகை, ஒரு மகிழ்ச்சி வர தான் செய்கின்றது. வாழ்வில் பணம் முக்கிய இடத்தினை பெற்றுள்ளது. பணம் இல்லாமல் வாழ்க்கை இயங்காது தான். ஆனால் இந்த பணத்தினை எவ்வாறு சம்பாதிக்கின்றோம்? எவ்வாறு சேமிக்கின்றோம்? எவ்வாறு செலவிடுகின்றோம்? எவ்வாறு முதலீடு செய்கின்றோம்? என்பதனை பொறுத்துதான் பொருளாதார எதிர்காலம் அமைகின்றது.
பலர் அதிகமாக சம்பாதித்தாலும் மாத இறுதியில் பணம் இல்லாமல் தவிக்கிறார்கள். சிலர் சாதாரண வருமானம் இருந்தாலும் நிம்மதியாக வாழ்கிறார்கள். காரணம் வருமானம் பற்றிய அறிவு ஒழுக்கமும் தான்.
பணம் ஒரு சக்தி. தவறாக பயன்படுத்தினால் கடனிலும், கவலையிலும் தள்ளிவிடுமே. இது வெறும் காகித நோட்டு அல்ல. ‘சக்தி சக்தி’. பணம் பரிமாற்ற சாதனம். பண்ட மாற்றும் முறை.
* பொருட்களை வாங்க உதவும்.
* சேமிப்பை எளிதாக்கும். முதலீட்டிற்கு அடிப்படையாகிறது.
* எதிர்கால திட்டங்களை நிறைவேற்ற உதவுகிறது.
* பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகின்றது.
* எதிர்கால திட்டங்கள் நிறைவேற உதவுகின்றது.
* திறமை, நேர்மை, தரமான சேவை பணத்தை அதிகரிக்கும்.
* வருமானம் வந்தவுடன் முதலில் 20 சதவீதம் சேமித்து விடுங்கள் என்பதுதான் நிபுணர்களின் அறிவுரையாக உள்ளது.
* மீதமுள்ள தொகையே உங்கள் வருமானம் என இருக்க வேண்டும்.
* செலவைவிட வருமானம் அதிகம் இருக்கும் படியாக தான் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
* சிறுதுளி பெருவெள்ளமாக சேமிப்பு வளரும் என்பது உண்மை.
* பணமும் நமக்காக உழைக்க வேண்டும்.
* முதலீடுகள், வாடகை வருமானம், பங்குகள், பரஸ்பர நிதிகள் ஆகியவை செயலற்ற வருமானத்தினை தருகின்றன.
* வருமானம் கொடுக்கும் கடன் சரி எனலாம்.
* ஆடம்பர செலவிற்கான கடன் கூடவே கூடாது.
* புரியாத முதலீட்டில் பணம் போடக்கூடாது.
* நிதி அறிவு மிகப்பெரிய சொத்து.
* வருமானம், வரி, முதலீடு, காப்பீடு பற்றி அனைவரும் அறிய வேண்டும்.
* புத்தகங்கள், கருத்தரங்குகள் நம்பகமான நிதி ஆலோசனை பலனளிக்கும்.
* நேர்மையாய் சம்பாதித்த பணமே நீடித்த பயன் தரும்.
* மோசடி, சட்டவிரோத வருமானம், ஊழல் போன்றவை.
* குறைந்தபட்சம் 6 மாத குடும்ப செலவை சமாளிக்க அவசர நிதி சேமிப்பு அவசியம்.
* கொஞ்சம் தானம் செய்யுங்கள்.
* நேரத்தினை மதிக்க வேண்டும்.
* குழந்தைகளுக்கு சேமிப்பினை பற்றி சொல்லிக் கொடுங்கள்.
* பணம் ஒரு நல்ல வேலைக்காரன். ஆனால் மோசமான எஜமான்.
*சம்பாதிப்பதை விட சேமிப்பு செய்வது கடினம்.
* சேமிப்பதை முறையாய் முதலீடு செய்வது புத்திசாலித்தனம்.
* அதிக வருமானம் இருந்தாலும் சேமிப்பு இல்லை என்றால் செல்வம் இல்லை.
* ஒரே சம்பளத்தை நம்பி வாழ்வது இன்றைய காலத்திற்கு சரி வராது.
* பணக்காரனை போல தோன்றுவது முக்கியமல்ல.
* பசி கொண்டவரின் பசி தீர்ப்பது செல்வத்தின் உயர்ந்த பலன்.
சாணக்கியர் இந்தியாவின் தலை சிறந்த அரசியல் பொருளாதார மற்றும் நிர்வாக அறிஞர்களில் ஒருவராக கருதப்படுகின்றார். அவர் எழுதிய நூல்களில் பொருளாதார செல்வ மேலாண்மை பற்றியும் ஆழமான கருத்துக்கள் உள்ளன.
* பணம் வாழ்க்கையின் இறுதி இலக்கு அல்ல. தர்மமான வாழ்க்கை நடத்துவதற்கும், குடும்ப பாதுகாப்பிற்கும், நாட்டை வளப்படுத்துவதற்கும் அவசியமான கருவியாகும்.
* செல்வம் மனிதனுக்கு வலிமையை அளிக்கிறது. செல்வம் உடையவனை உலகம் மதிக்கும். செல்வம் இல்லாதவனின் அறிவு கூட சில நேரம் மதிக்கப்படாமல் போகலாம்.
* அறிவும், செல்வமும் இருந்தால் சமுதாய நன்மை உயரும்.
* ஆகவே செல்வத்தை பாதுகாத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.
* சமூக நலனுக்காக பகிர்ந்து வாழுங்கள்.
எல்லா நாடுகளிலும் பணம், சேமிப்பு, பொருளாதாரம் இவற்றிற்கு முக்கியத்துவம் தருவார்கள் தானே. அவர்கள் கூறுவதும்,
* வரவுக்கு மீறிய செலவு, கடன் மன உளைச்சலை தரும். அளந்து செலவிடுங்கள்.
* தேவையில்லாமல் மனம் போன போக்கில் எதனையும் வாங்காதீர்கள். கிரெடிட் கார்டு உங்களை கடனாளி ஆக்குவதற்கு அல்ல.
* ஒரு கடனை வேகமாய் அடைத்து விட்டு மற்றொரு கடனுக்கு தாவாதீர்கள்.
* அவசர நிதி இல்லை என்று இழுக்க கூடாது. சேமிப்பும், முதலீடும் மூச்சு போல் இருக்க வேண்டும்.
* பிறர் முன் பெருமை காட்ட செய்யும் செலவு படுகுழியில் விழுவதற்கு சமம்.
* தேவையில்லாத பொருட்களை வாங்கி வீட்டை குப்பை ஆக்காதீர்கள்.
* பொருளின் நியாயமான விலையினை அறிந்து வாங்குங்கள்.
* பொருளாதாரம் சம்பந்தமான புத்தகங்களை படியுங்கள் எதனையும் தாமதமாக செய்வதும் பொருளாதார இழப்பினை தரலாம்.
இவைகளும் அருமையான அறிவுரைகளே முறையான ஒழுக்கமான வாழ்க்கைக்கு அனைவரும் சில பயிற்சிகளை செய்யலாமே.
* தினமும் வெறும் வயிற்றில் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் நிதானமான ஆழ்ந்த மூச்சு எடுங்கள் மனம் அமைதி பெறும். கவனம் கூடும்.
* மூளைக்கு பயிற்சி கொடுங்கள்- புதிர், கணிதம் இவை செய்யும் பொழுது மூளை தெளிவு பெறும். செயல்திறன் கூடும்.
* பயனுள்ள புத்தகங்கள் படித்தல்.
* போதுமான நீர் எடுத்துக் கொள்ளுதல். யோகா பயிற்சி.
என்ன செய்ய வேண்டும் என்பதனை முறைப்படுத்துதல் ஆகியவை உங்களை புத்திசாலியாக மாற்றும்.
* அன்றாட உழைப்பு- வார, மாத சம்பளம், நம்பகமான முதலீடு (நல்ல வங்கிகள்) இது சேமிப்பு.
* சம்பளம் வாழ்க்கையை ஓட்டும். பணம் செலவழியும். சேமிப்பு அன்றாடம் மி.மீட்டாவது வளரும்.
* சம்பளத்தில் மீதியை சேமிக்கலாம். போதிய சுதந்திரம் இராது. மாதம் பிறந்தால் சம்பளம். பின் கரையும். முதலீடும், சேமிப்பு நாளைய மிகப்பெரிய செல்வம்.
* வேலை செய்தால் பணம் கிடைக்கும்.
* பணம் சேமிப்பினை உருவாக்கும்.
* சேமிப்பு சொத்து சேர்க்கை தரும்.
* செல்வம் சுதந்திரம் தரும்.
பணத்தைப் பற்றிய ரகசியங்கள் இவ்வளவுதான்.
* பணம் ஒரு கருவி. வாழ்வின் இறுதி இலக்கு அல்ல.
* பணத்தை மட்டுமே மதிப்பவர் பணத்தால் மட்டுமே மதிக்கப்படுவார்.
* சிறு சேமிப்புகளும் பெரிய செல்வத்தை உருவாக்கும்.
* வருமானத்தை விட செலவை கட்டுப்படுத்துவது முக்கியம்.
* முதலில் உங்களுக்காக சேமியுங்கள்.
* ஒவ்வொரு ரூபாய்க்கும் ஒரு நோக்கம் இருக்க வேண்டும்.
* தேவைக்கும் ஆசைக்கும் உள்ள வித்தியா சத்தினை அறியுங்கள்.
* கடன் வாங்குவது எளிது. திருப்பி செலுத்துவது சவால்.
* நல்ல கடனும், கெட்ட கடனும் வேறுபடும்.
* முதலீடு செய்யாத பணம் மதிப்பு இழக்கும்.
* பண வீக்கம் சேமிப்பை மெதுவாய் குறைக்க ஆரம்பிக்கும்.
* நேரம் முதலீட்டின் சிறந்த நண்பன்.
* கூட்டு வட்டி உலகின் அற்புத சக்திகளில் ஒன்று.
* வருமானத்திற்கு பல வழிகளை உருவாக்குங்கள்.
* ஒரே வருமானத்தை மட்டும் நம்ப வேண்டாம்.
* அறிவே மிகப்பெரிய முதலீடு.
* திறமைகள் வருமானத்தை அதிகரிக்கும்.
* ஆரோக்கியம் மிகப்பெரிய செல்வம்.
* நேரம் பணத்தை விட மதிப்புடையது.
* வரவு-செலவு கணக்கு அவசியம்.
* அவசர நிதி கட்டாயம்.
* காப்பீடு குடும்பத்தை காக்கும்.
* சிறிய செலவுகளும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
* தேவையற்ற சந்தாக்களை நிறுத்துங்கள்.