சிலர் உடற்பயிற்சி என 20 நிமிடம் செய்வார்கள். அல்லது நடப்பார்கள். அதன் பிறகு அன்றைய கடமையே முடிந்து விட்டது போல் நாள் முழுவதும் அசையாது. ‘இடித்த புளி’ போல் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பார்கள். இல்லை படுத்து இருப்பார்கள்.
உடல் இயங்கிக் கொண்டே இருப்பதனை விட ஒரு சிறந்த மருந்து கிடையது என்பதுதான் உடலின் இயங்குதலுக்கு மாற்றாக எந்த மருந்தும் இல்லை என்றாகும். நாள் முழுவதும் அடிக்கடி நடந்து கொண்டே இருக்கும் போது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. (உதாரணம்) தண்ணீர் வேண்டும் என்றால் தானே எழுந்து சென்று குடிக்கலாம். அருகில் இருக்கும் கடைக்கு நடந்து செல்லலாம். இப்படி இருப்பதால் கிடைக்கும் பலன்கள்.
* உடல் இயக்கம் இருக்கும் பொழுதுதான் உயிர் உற்சாகமாக இருக்கும். மனம் புத்துணர்வோடு இருக்கும். சதா ஒரே இடத்தில் இருப்பவர்கள் எப்பொழுதும் சோர்வாக இருப்பார்கள்.
* நடப்பது மனிதனின் இயற்கையான மருந்து.
* தினசரி உடல் இயக்கம் நோய்களில் இருந்து காக்கும்.
* ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
* தொடர்ந்து இயங்கும் உடலில் சோர்வு குறையும்.
* உடல் இயக்கமின்மையே பல நோய்களின் முதல் காரணம்.
* மருந்து நோயை கட்டுப்படுத்தும். இயக்கம் உடலை மாற்றும்.
* உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
* சுறுசுறுப்பான வாழ்க்கை நீண்ட ஆயுளைத் தரும்.
* இதய ஆரோக்கியம் மேம்படும்.
* இதய நோய் அபாயம் குறையும்.
* ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
* நல்ல கொழுப்பு அதிகரிக்கும்.
* கெட்ட கொழுப்பு நன்கு குறையும்.
* இருதய தசைகள் வலுப்பெறுகின்றன.
* பக்கவாதம் அபாயம் குறையும்.
* இயக்கம் இதயத்தின் இயற்கை பாதுகாப்பு.
* மருந்துக்கும் மேலான இதய காவலன் உடல் இயக்கம்.
* சர்க்கரை நோய் கட்டுப்படும்.
* இன்சுலின் செயல்பாடு மேம்படும்.
* உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
* கலோரி எரிப்பு இயற்கையாய் நிகழும்.
* வயிறு கொழுப்பு குறையும்.
* சோம்பேறித்தனம் குறையும்.
* மன அழுத்தம் குறையும்.
* உடல் இயக்கம் மன நல மருந்து.
* கவலை, பதட்டம் குறையும்.
* மனச் சோர்வு வராது.
* மனநிலை மகிழ்ச்சியாய் மாறும்.
* தூக்கமின்மை குறையும்.
* நல்ல உறக்கம் ஏற்படும்.
* மன ஒருமைப்பாடு அதிகரிக்கும்.
* நினைவாற்றல் கூடும்.
* மூளை செயல்பாடு துண்டப்படும்.
* மறதி பாதிப்பு குறையும்.
* படைப்பாற்றல் அதிகரிக்கும்.
* மனத்தெளிவு அதிகரிக்கும்.
* மூளைக்கு ஆக்சிஜன் அதிகம் கிடைக்கும்.
* சிந்தனை வேகம் அதிகரிக்கும்.
* தன்னம்பிக்கை கூடும்.
* நேர்மறை எண்ணங்கள் இருக்கும்.
* உடல் சமநிலை மேம்படும்.
* எலும்புகள் வலுப்பெறும்.
* தசைகள் உறுதியாகும்.
* உடல் நெகிழ்வுத் தன்மை அதிகரிக்கும்.
* மூட்டு வலி குறையும்.
* முதுகு வலி குறையும்.
* நீண்ட நேரம் அமர்ந்திருப்பதன் பாதிப்புகள் குறையும்.
* கழுத்து மற்றும் தோள் பட்டை வலி குறையும்.
* உடலின் சக்தி அதிகரிக்கும்.
* தினசரி வேலைகள் எளிதாகும்.
* சோர்வு இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
* முதுமை தாமதப்படும்.
* தோல் ஆரோக்கியத்துடன் இளமையுடன் இருக்கும்.
* அதிக நேரம் அமர்ந்திருப்பது ‘புகை பிடித்தலுக்கு சமம்’ என்று கூறப்படுகின்றது.
* அலுவலகத்தில் கூட இடைஇடையே எழுந்து நடப்பது அவசியம்.
* முதல் மாடிக்கு கூட லிப்ட் பயன்படுத்தாமல் படிகட்டுகளை பயன்படுத்தலாம்.
* வீட்டு வேலையும் உடற்பயிற்சிதான்.
* உடல் இயக்கம் தரும் பலன் என்பது எந்த மருந்தாலும் தர முடியாத அற்புதம்.
* காலையில் சீக்கிரம் எழ வேண்டும்.
* எழுந்தவுடன் அன்றைய நாளுக்காக இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
* வெது வெதுப்பான நீர் குடிக்க வேண்டும்.
* விரல் கொண்டு பல் தேய்க்க வேண்டும். பிறகு பிரஷ் உபயோகிக்கலாம்.
* நாக்கினை சுத்தம் செய்ய வேண்டும்.
* முகத்தினை மெதுவாய் தேய்த்து கழுவ வேண்டும்.
* ஜன்னல்கள் சூரிய ஒளிக்காக திறந்து இருக்கட்டும்.
* ஸ்ட்ரெச் செய்யுங்கள். எளிமையான உடற்பயிற்சிகளை முதலில் செய்யுங்கள்.
* ஆழ்ந்த மூச்சு சில முறை எடுக்கலாமே.
* யோகா பயிற்சி செய்யவும்.
10-15 நிமிடங்கள் அமைதியான தியானம் தேவை.
* மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.
* ஆக்கப்பூர்வமான புத்தகத்தில் சில பக்கங்களை படிக்க வேண்டும்.
* செல்போனை உடனடியாக எடுக்க வேண்டாம்.
* உங்கள் படுக்கையை தட்டி, உதறி சீர் செய்து நன்கு மூடி விடுங்கள்.
* காலை நடைபயிற்சி நல்லது.
* தெய்வீக பாடல்கள் மெலிதாய் ஒலிக்கலாம்.
* ஹெர்பல் டீ அருந்தலாம்.
* ஆரோக்கிய காலை உணவிற்கு அக்கறை கொடுக்கலாம்.
* சிறிது நேரம் குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கலாம்.
* உங்களை கண்ணாடியில் பார்த்து புன்னகையுங்கள்.
* அன்றைய நாளை முறையாய் திட்டமிட்டு எழுதுங்கள்.
* முடிந்தால் ஒரு செடிக்காவது நீரூற்றுங்கள்.
* பறவைகளுக்கு உணவு கொடுங்கள்.
* நீர் வையுங்கள் .
* கை, கால் மற்றும் விரல்கள் என உடல் சுத்தமாக இருக்க வேண்டும்.
* குளிப்பதற்கு நிதானம், நேரம் கொடுத்தல் அவசியம்.
* உடைகள் சுத்தமாக இருக்க வேண்டும். உங்கள் அறை சுத்தமாக இருக்க வேண்டும்.
* குரலில் அன்பு வேண்டும். அழிவுப் பூர்வமாக பேசவே கூடாது.
* மவுனமாக சில நிமிடங்கள் அவ்வப்போது இருங்கள்.
* தண்ணீர் நன்றாக குடியுங்கள்.
* காலை எழுந்தவுடன் வம்பு, சண்டை என வேண்டாமே.
* இன்றைய நாள் நன்றாக இருக்கும் என நம்புங்கள்.
மேலே கூறப்பட்டவை சாதாரணமாக தெரியலாம். அதனால் இவை அனைத்தையும் எத்தனை பேர் கடைப்பிடிக்கின்றீர்கள்.
ஆக இன்று முதல் இவை அனைத்தையும் ஒன்று விடாது கடைபிடிக்க ஆரம்பியுங்கள்.