சிறப்புக் கட்டுரைகள்

மருத்துவம் அறிவோம்- உறுதியான கால்களுக்கு பயிற்சி

நடைபயிற்சி ஆயுள் நீடிக்க முக்கிய காரணமாக கருதப்படுகின்றன.

இப்போது எல்லாம் நாம் அடிக்கடி காதில் கேட்பது உடற்பயிற்சி, ஆரோக்கியம் பற்றிய ஒரு வார்த்தை. அதாவது ‘தினமும் நான் 10 ஆயிரம் அடிகள் நடந்து விடுகிறேன்’ என்பதுதான். இதற்கான நடையினை கணக்கிடும் கைக்கடிகாரம் போன்ற ஒன்றினை கையில் கட்டிக் கொள்கின்றனர். எதற்காக இந்த 10,000 அடிகள். இதன் நன்மைகள் என்ன? என்பதை பார்ப்போம்.

* அன்றாடம் 10 ஆயிரம் அடிகள் நடப்பவர்களுக்கு (இதனை முழு ஆரோக்கியம் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனைப் பெற்று செய்ய வேண்டும்) இதய ஆரோக்கியம் நன்கு இருக்கும். இதய தசைகள் வலுவாகி, ரத்த ஓட்டம் சீராகும்.

* உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருக்கும். கலோரி எரிப்பு கூடும். உடல் பருமன் குறையும்.

* சர்க்கரை நோய் கட்டுப்படும். இன்சுலின் சென்சிடிவிடி அதிகரித்து ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

* மன அழுத்தம் குறையும். நடைபயிற்சி செல்வது. மன அமைதி தரும். டோபமின், செரடோனின் அளவு அதிகரித்து மன ஆரோக்கியம் அளிக்கும்.

* எலும்பு மற்றும் தசைகளின் வலிமை கூடும். பலப்படும். எலும்பு, தசைகள் நன்கு செயல்படும்.

* இரவில் நன்கு தூக்கம் இருக்கும்.

* உணவின் செரிமானம் மேம்படும். செரிமானம் சீராகும்.

* நடைபயிற்சி ஆயுள் நீடிக்க முக்கிய காரணமாக கருதப்படுகின்றன.

* நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலின் பாதுகாப்பு மேம்படும்.

* மூளை செயல்பாடு மேம்படும். நினைவாற்றல், கவனம் அதிகரிக்கும்.

* மூட்டு இயக்கம் மேம்படும். உடல் நெகிழ்வுத் தன்மை அதிகரிக்கும்.

* உயர் ரத்த அழுத்தம் குறையும். ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

* சிறுநீரகம், கல்லீரல் செயல்பாடு சீராக இருக்கும்.

* கெட்ட கொழுப்பு அளவு குறையும். நல்ல கொழுப்பு அளவு சீராக இருக்கும்.

* சில ஆய்வுகள் புற்று நோய் பாதிப்பு அபாயம் குறைவதாக குறிப்பிடுகின்றன.

சரி, இதனால் நன்மைகள் மட்டும் தானா? இதனால் பக்க விளைவுகள் இருக்கின்றதா?

* மூட்டு வலி, கால் வலி ஏற்படலாம்.

* தசைகள் சோர்வடையலாம்.

* கால்களில் புண்கள், கொப்பளங்கள் ஏற்படலாம். தவறான காலணிகள் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.

* குதிகால் வலி ஏற்படலாம்.

* அதிக கலோரி அரிப்பால் சோர்வு ஏற்படலாம். உடல் பலவீனப்படலாம்.

* நீர் சத்து குறையலாம். தேவையான அளவு நீர் குடிக்காவிட்டால் தலைசுற்றல் ஏற்படலாம்.

* இதய நோயாளிகளோ, மற்ற உடல் நல பிரச்சினை உள்ளவர்களோ மருத்துவ ஆலோசனை இன்றி பயிற்சி செய்வது பிரச்சினைகளை கண்டிப்பாய் ஏற்படுத்தும்.

* மூட்டு சுழற்சி அதிகரிக்கலாம்.

* உடற்பயிற்சி அதிகமானாலும் உடல் ஓய்வு இல்லாமல் தொடர்ந்து செய்வது பாதிப்பு ஏற்படுத்தலாம்.

* முதுகு வலி ஏற்படலாம்.

பத்தாயிரம் அடிகள் என்றவுடன் ஒரே நேரத்தில் இதனை முடிக்க வேண்டும் என்று கிடையாது. நடைபயிற்சி மற்றும் நாள் முழுவதும் நாம் நடப்பது என முழு நாளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. இது அன்றாடம் எந்த அளவு சுறுசுறுப்புடன் இயங்குகின்றோம் என்பதனையே உணர்த்துகின்றது.

எல்லோருக்கும் 10 ஆயிரம் அடி நடை என பொதுவாக கூற முடியாது. சில ஆய்வுகள் அன்றாடம் 7 ஆயிரம், 8 ஆயிரம் அடி நடையே போதுமானது என்று கூறுகின்றன.

* வயது, உடல்நிலை, நோய்களை பொறுத்தே அடிகளை நிர்ணயம் செய்ய வேண்டும்.

* மெதுவாக ஆரம்பித்து படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.

* நல்ல காலணிகள் அவசியம்.

* தினமும் 2½ முதல் 3 லிட்டர் வரை நீர் அருந்த வேண்டும்.

* உடற்பயிற்சி ஆரம்பிக்கும் இளைஞர்கள் 7 ஆயிரம் அடி நடைகளில் ஆரம்பிப்பது நல்லது.

* முதியவர்கள் அதிக அழுத்தம் இல்லாமல் உடல் நலத்தை பராமரிக்க உதவும்.

* மிக சிறந்த ஆய்வுகள் கூறுவது 7 ஆயிரம், 8 ஆயிரம் அடிநடைகள் அன்றாடம் நடந்தாலும் அது மரணத்தினை தள்ளி போடுகின்றது என்பதுதான்.

* சோர்வு நன்கு குறையும்.

மருத்துவ ஆலோசனை, பயிற்சியாளர் ஆலோசனை என்பது மிக அவசியம் பொதுவில் 10 ஆயிரம் அடி நடப்பவர்கள்

கமலி ஸ்ரீபால்

* சுறுசுறுப்பு, உடல் வலிமை, ஆரோக்கியம் எடை குறைப்பு ஆகிய காரணங்களுக்காக முயற்சிக்கின்றனர்.

* சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி உள்ளவர்களுக்கு மிதமான நடையே பாதுகாப்பானது.

* மருத்துவரீதியாக ஒரு வாரத்தில் 15 முதல் 30 நிமிடங்கள் உடற்பயிற்சியை பிரதானதாக பரிந்துரைக்கின்றனர்.

அதிகமாக நடப்பது நல்லது என்றாலும் அதிவேகமாக நடப்பது உடலுக்கு நீங்கு தரும்.

* தினமும் சிறிது நேரம் நடப்பது என்பது எண்ணிக்கையை விட முக்கியமானது.

5 வயது முதல் 12 வயது வரையில்

* விளையாட்டு, ஓட்டம் போன்றவை அவசியம்.

* உடல் வளர்ச்சி, எலும்பு வலிமைக்கு உதவும்.

* அதிக சக்தி இருப்பதால் அதிகமாக இயங்க வேண்டும். இவர்கள் எத்தனை எண்ணிக்கை அடிகள், பயிற்சி என்பதனை பயிற்சியாளர் மூலம் ஆலோசனை பெற வேண்டும்.

13 முதல் 18 வயது உடையவர்கள் விளையாட்டு, உடற்பயிற்சி சேர்த்து செய்ய வேண்டும்.

19 முதல் 40 வயது வரை வேலை, பிசியான வாழ்க்கை என்றாகும். 41 வயது முதல் 60 வயது வரை- 6000 முதல் 8000 அடிகள் நடக்க வேண்டும். மூட்டு பாதுகாப்பு அவசியம். சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்கு இந்த முயற்சி உதவி செய்யும்.

60 வயதுக்கு மேல் இருப்பவர்கள் 4 ஆயிரம் முதல் 7 ஆயிரம் அடிகள் நடக்கலாம். சமநிலை அவசியம்.

ஆனால் இவை அனைத்தையும் விழிப்புணர்வு செய்தியாக கொண்டு மருத்துவர், உடற்பயிற்சியாளர் ஆலோசனையை அனைத்து வயதினரும் பெற வேண்டும்.

70 வயதிலும் கால்களின் வலிமை

70 வயதிலும் கால்களின் வலிமையை மேம்படுத்தலாம். ஆனால் அது மெதுவாகவும், பாதுகாப்பாகவும், ஒழுங்காகவும் பயிற்சியாளர் ஆலோசனையோடும் செய்யப்பட வேண்டும். அவற்றை பார்ப்போம்.

* தினமும் மெதுவாக நடக்கத் தொடங்க வேண்டும்.

* ஆரம்பத்தில் 5 முதல் 10 நிமிடங்கள் செய்யுங்கள்.

* பின் மெதுவாக 30 நிமிடங்கள் வரை அதிகரிக்கலாம்.

* நாற்காலியிலேயே உட்கார்ந்து எழும் பயிற்சி செய்யலாம்.

* சுவரில் சாய்ந்தும் ஸ்குவாட் பயிற்சி செய்யலாம்.

* குதிகால் உயர்த்தும் பயிற்சி செய்யலாம்.

* கால் விரல்களை உயர்த்தலாம்.

* சிறிய படியில் ஏறி இறங்கலாம்.

* கால் சுழற்சி ரப்பர் பாண்ட் (பிரத்யேக மானது) கொண்டும் பயிற்சி செய்யலாம்.

* நின்ற சைக்கிள் பயிற்சி செய்யலாம்.

* நீரில் நடைபயிற்சி பாதுகாப்பானது.

* தாய்சி போன்ற மென்மையான பயிற்சிகள் செய்யலாம்.

* யோகா பயில வேண்டும்.

* சமநிலை பயிற்சிகள் அவசியம்.

* ஒரு காலில் நின்று பழகவும்.

* கைப்பிடி கொண்டு நடக்கலாம்.

* தினமும் ஒரே நேரத்தில் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

* புரதம் தேவையான அளவு அன்றாடம் எடுத்துக் கொள்வது அவசியம்.

* முட்டை, பால், பருப்பு, தயிர் இவைகளை உணவில் சேர்க்க வேண்டும்.

* சிறிது நேரம் சூரிய ஒளி உடலில் படட்டும்.

* பாதாம், வால் நட், காய்கறி, பழங்கள், முழு தானிய உணவு வேண்டும்.

* அதிக உப்பு, சர்க்கரை கூடாது. 3 லிட்டர் தண்ணீர் அவசியம்.

* ஒமேகா 3 சத்து அல்லது மீன் உணவு தேவை.

* சிறிய சிறிய அளவில் அடிக்கடி உணவு எடுத்துக் கொள்ளலாம்.

* இரும்பு சத்து, வைட்டமின் பி12 அளவினை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

* மருத்துவர் ஆலோசனைப்படி சத்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்.

வாழ்க்கை முறைகள், போதுமான தூக்கம், 7,8 மணி நேரம் அவசியம்.

* மது, புகை, தவிர்த்து விட வேண்டும். நல்ல காலணிகள் அவசியம். விழாமல் இருக்க வீட்டை பாதுகாப்பு முறையாக மாற்ற வேண்டும்.

* வலி இருந்தால் பயிற்சிகளை நிறுத்தி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

* குடும்பத்தினர் ஆதரவு அவசியம்.

* நீண்ட நேரம் உட்கார வேண்டாம் ஒவ்வொரு மணி நேரத்தில் ஒரு முறை சில நிமிடங்கள் நடக்கலாமே.

* ரத்த பரிசோதனைகளை தவிர்க்காது செய்து விடலாமே. மேலும் ஆரோக்கியமாக இருக்கலாமே.