சிறப்புக் கட்டுரைகள்

ஆசையே தவறுகளுக்கு காரணம்!

பிறர் தவறுகளை நன்கு நினைவில் வைத்திருப்பார்கள்.

மனித இயல்பில் பல கடுமையான உண்மைகள் மறைந்து இருக்கின்றன.

அவரவர் மனதளவிலாவது இதனை ஒத்துக்கொள்வோமே!

பெரும்பாலான மனிதர்கள் சுயநலமாகவே நடக்கின்றார்கள்.

தனக்கு நன்மை செய்தவர்களையும் அவர்கள் மறந்து விடுகின்றார்கள்.

வெளிப்படையான நடிப்பும் உண்மையான மனதை மறைக்கும் பணமும் அதிகாரமும் ஒருவரின் குணத்தினையே மாற்றி விடுகின்றது.

பொறுமை மனிதர்களின் இயல்பில் பொதுவானது.

உண்மையை விட சுகமான பொய்யையே அனைவரும் விரும்புகிறார்கள்.

பயமே முடிவுகளை கட்டுப்படுத்துகின்றது.

ஆசை பல தவறுகளுக்கு காரணமாகின்றது. மனிதர்கள் கூட்டத்தினை பின் பற்றுகின்றார்கள்.

நெருக்கடியில் தான் மனிதனின் உண்மையான முகம் தெரிகின்றது.

பலர் தங்கள் தவறுகளை ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.

தீர்ப்புகள் மனதின் வேகத்தின்படி எடுக்கப்படுகின்றன.

வெளிப்புறத் தோற்றமே மதிப்பை நிர்ணயிக்கின்றது.

பழக்கமே குணத்தின் அடிப்படை ஆகின்றது.

புகழ்ச்சி ஒருவரை எளிதில் பாதித்து விடுகின்றது.

தனக்கு லாபம் கிடைக்கும் என்றால் எந்த விதியையும் மீறி விடுகின்றார்கள்.

உறவுகள் நம் மீது எதிர்பார்ப்போடு தான் இருக்கின்றன.

பலவீனங்களை மறைக்க கடும் முயற்சி எடுத்துக் கொள்கின்றனர்.

நேர்மையானவர்களே அதிக சிரமங்களை சந்திக்கின்றார்கள்.

நல்ல மாற்றம் என்பது கடினம் ஆகின்றது.

தங்களைப் பற்றி மட்டுமே அதிகம் சிந்திக்கின்றார்கள்.

கமலி ஸ்ரீபால்

தவறுகளை எல்லோரும் நியாயப்படுத்துகின்றார்கள்.

வெற்றியானால் அது தங்களுக்கு. தோல்வியானால் அது சூழ்நிலைக்கு என்று ஒதுங்குகின்றனர்.

ஊடகங்களின் தாக்கத்தால் நிறைய நன்மை ஏற்படுகின்றன. ஆனால் மக்கள் தீமையையே அதிகம் விரும்புகின்றார்கள்.

உணர்ச்சிகளை மறைத்து வாழ்கின்றார்கள். உணர்வுகளை உணரத் தவற விடுகின்றார்கள்.

பிறர் துன்பத்தில் சிலர் மகிழ்ச்சி அடைகின்றார்கள்.

தங்களுக்கு சாதகமாகவே நம்புவார்கள். கடினமான உண்மைகளை மறைத்து விடுவார்கள்.

உடனடி பலனை விரும்புகின்றார்கள்.

பொறுமை என்பது எல்லோரிடமும் ரொம்பவும் குறைந்துவிட்டது.

பிறர் தவறுகளை நன்கு நினைவில் வைத்திருப்பார்கள்.

நெருக்கமானவர்களிடம் அதிகம் கோபப்படுகின்றனர்.

அடிக்கடி மாற்றத்தினை எதிர்பார்க்கின்றார்கள்.

வெளிப்புற அங்கீகாரத்திலேயே வாழ்கின்றனர்.

நல்லவர்களும் தவறு செய்யலாம்.

ஒப்பீடு செய்வது என்பது மனிதனுக்கு அதிக துயரத்தினை உருவாக்குகின்றது.

நம்பிக்கையை எளிதில் உடைத்து விடுகின்றார்கள்.

பயன் இல்லை என்றால் உறவுகளை வெட்டி விடுகின்றார்கள்.

பொய்யான வாக்குறுதிகள் அதிகமாகி விட்டன.

அதிகாரம் பெரும்பாலும் இங்கு அகங்காரத்தை கொடுக்கின்றது.

தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

விமர்சனங்களை ஏற்க முடிவதில்லை.

சுயக்கட்டுப்பாடு குறைந்துவிட்டது.

தற்கால நிவர்த்தியையே பெறுகின்றனர். உண்மையை பேச பயப்படுகின்றார்கள்.

சோம்பேறித்தனம் பொதுவானது.

தவறுகளை திருத்திக் கொள்வது இல்லை.

சுய பரிசோதனை இல்லை.

மனதில் ஒன்று பேச்சில் ஒன்று என்று உள்ளனர்.

நிறைய விஷயங்கள் பூதாகரமாக்கப்படுகின்றன.

தன் பார்வை மட்டுமே சரி என்கின்றனர்.

எதிர்பார்ப்புகள் ஒவ்வொருவருக்கும் எக்கசக்கமாக உள்ளது.

மன்னிக்கவே முடிவதில்லை. மனிதன் மனதளவில் பலவீனமானவன் தான்.

சுகமான வாழ்க்கை என்று பொருள் சார்ந்தே வாழ்க்கை உள்ளது.

தியாகம் என்றால் என்ன? ஒரு தாயிடம் மட்டுமே தந்தையிடம் மட்டுமே இது இருக்கும்.

உண்மையான நட்பு என்பது அரிது.

அனேகர் வெளியில் சிரித்து உள்ளே கவலைப்படுகின்றார்கள்.

ஆசை எல்லையில்லாமல் ஆகிவிட்டது. இவை மனித இயல்பின் ஆழமான உண்மைகளை உணர்த்துகின்றது.

இதனை கொஞ்சமாவது மாற்ற அனைவரும் முயற்சி செய்யலாமே.

நாம் ஏன் புத்திசாலியாக

இருக்கக்கூடாது?

ஒருவரை பார்த்தாலே சிறந்த புத்திசாலி என்று தோன்றும். அது அவர் அறிவால் மட்டுமல்ல. அவரின் நடத்தை, பேச்சு, சிந்தனை முறை மற்றும் வாழ்க்கையை அணுகும் முறையிலும் அமைந்துள்ளது. நாமும் முயற்சி செய்து நம்மை மாற்றிக் கொள்வோமே .

தினமும் நல்ல புத்தகங்களை படிக்கும் பழக்கத்தினை உருவாக்குவோம்.

புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவோம்.

கேள்வி கேட்போம், இது ஆழ்ந்த சிந்தனையை காட்டும்.

ஒரு விஷயத்தை பல கோணங்களில் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள்.

நம் கருத்தினை ஆதாரத்துடன் விளக்க பழகுவோம்.

எப்பொழுதும் ‘ஏன்’ என்று சிந்திப்போம்.

சிக்கலான விஷயத்தினை தெளிவாக கையாள வேண்டும்.

தினசரி செய்திகளை பார்த்து, படித்து அறிய வேண்டும். தவறுகளை உணர்ந்து அதில் இருந்து கற்றுக் ெகாள்ள வேண்டும். புதிய மொழி கற்றுக் கொள்வது மூளை செயல்பாட்டை அதிகரிக்கும். சுய ஆய்வு செய்யும் பழக்கம் வேண்டும். சிக்கலைத் தீர்க்கும் திறன் வேண்டும். நினைவாற்றலை சில பயிற்சிகள் மூலம் மேம்படுத்தலாம்.

புத்திசாலிகளின் வாழ்க்கை வரலாற்றை படிக்க வேண்டும், ஆராயுங்கள். விவாதங்களில் சீரிய முறையில் பங்கேற்கலாமே. எப்போதும் உண்மையைத் தேடுவோம். நம் கருத்து தவறாகவும் இருக்கலாம். அப்படி இருந்தால் மாற்றிக் கொள்ளலாம். மெதுவாய், தெளிவாய் பேசுவோம். தவறான வார்த்தைகள் நம் அகராதியிலேயே இருக்கக் கூடாது.

கேட்பது பேசுவதைக் காட்டிலும் முக்கியம். சுருக்கமாக பேசுவது அழகு. உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள். மரியாதையான சொற்களை பயன்படுத்துவது கவுரவம். பொதுமக்கள் முன்பு பேசும் திறன் வேண்டும். மற்றவர்கள் கருத்துக்கும் மதிப்பு தர வேண்டும். சிரித்த முகத்துடன் இருக்கலாமே.

பல இடங்களில் மவுனம் நன்கு உதவும். எளிமையான சொற்கள் நமக்கு நாமே தரும் பரிசு. நேரம் தவறாமை, மதிப்பினைக் கூட்டும். சுத்தமான ஆடையே சிறந்த அலங்காரம். பொறுப்போடு செயல்பட வேண்டும்.

சுயகட்டுப்பாடு, நம் பாதுகாப்பு கவசம். சுற்றுப்புறத் தூய்மை சிறந்த சமூக சேவை. நேரத்தினை வீணடிக்காது பயன்படுத்தினால் நொடிக்கு நொடி பலன்தான். திட்டமிட்டு செயல்படுவது திறன். இலக்குகள் தெளிவாக இருக்க வேண்டும். தன்னம்பிக்கை மிக அவசியம். பிறரை மதிப்பது உயர் பண்பு. நன்றி உணர்வு. ரத்தத்தில் இருக்க வேண்டும்.

கோபம் தவிர்த்து, பொறுமை வளர்த்துக் கொள்ளலாம். நல்ல நண்பர்கள் நாடி துடிப்பு போல். ஆரோக்கியம் வாழ்வின் அடிப்படை. தாழ்மையாய் இருப்பது, மனஅழுத்தம் இன்றி இருப்பது, எளிமையாய் இருப்பது, தோல்வி கண்டு அஞ்சாது இருப்பது வீரத்தின் அடையாளம்.

பிறருக்கு உதவுவது. தலைமைத் திறன் கொள்வது, திறமைகளை வெளிப்படுத்துவது, அறிவை பகிர்ந்து கொள்வது மனிதனுக்குத் தேவையான குணங்கள். நேர்மையான முடிவுகளை மட்டுமே எடுப்போம். குழுவாகவும் வேலை செய்ய வேண்டும்.

சமூக அக்கறை வேண்டும். சுய முன்னேற்ற கவனமே மூச்சாக இருக்க வேண்டும். தியானமும், மூச்சுப் பயிற்சியுமே பல நன்மைகளை குவித்து விடும். பலவீனங்களை நீக்கு வோம். வெற்றிகளை குவிப்போம். இப்படி வாழ்ந்தால் நாம் புத்திசாலியாக மட்டும் தானே வாழ முடியும். செய்வோமே.