NivinPauly, MamithaBaiju  
Cinema

நிவின் பாலி - மமிதா பைஜூ இணைந்து நடித்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

பிரேமலு படத்தின் இயக்குநர் கிரீஷ் ஏ.டி இயக்கத்தில் ஓணம் பண்டிகைக்கு தியேட்டர்களை அதிரவைக்கும் பக்கா காதல் காவியம்!

மலையாளத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ இணையும் புதிய திரைப்படத்திற்கு ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ (Bethlehem Kudumba Unit) எனப் பெயரிடப்பட்டு, அதன் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் நிவின் பாலி தனது சமூக வலைத்தள பக்கத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பகிர்ந்து, "அன்பு... சிரிப்பு... ஓணம்... இதுதான் பிளான்! பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை உங்களுக்கு வழங்குகிறோம்" என்றும் காதல் கதையாக இந்த படம் இருக்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.

‘பவன்னா ஸ்டுடியோஸ்' தயாரிப்பில், இந்திய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘பிரேமலு’ படத்தின் இயக்குநர் கிரீஷ் ஏ.டி இயக்கத்தில், இசையமைப்பாளராக விஷ்ணு விஜய் ஆகியோர் இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு (2025) ஜூலை மாதமே நிவின் பாலி தனது எக்ஸ் (X) தளத்தில், "இது உங்களுக்கான படம்" தனது சினிமா பயணத்தில் "மிகவும் ஸ்பெஷலான ஒன்று" என்று பதிவிட்டிருந்தார்.

அதற்கேற்ப கடந்த செப்டெம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது.

இந்த படம் ஓணம் (2026) அன்று திரையரங்குகளில் ரசிகர்களுக்காக வெளியிடப்படும் என்றும் அப்படக்குழுவினர் கூறி வருகின்றனர்.

தற்போது இந்தப் படத்தில் நடித்து முடித்துள்ள நிவின் பாலி, அடுத்ததாகத் தமிழில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதையில், ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ (Benz) திரைப்படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.