தண்டர் மீடியா கண்மணி ரங்கநாதன் மற்றும் LV என்டர்டெயின்மெனட் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரிக்கும் "பாரிஸ் கஃபே" (Paris cafe) திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் நடித்துள்ளனர். மேலும் அர்ச்சனா குமார், விஜய் விஸ்வா, சாய் விக்கி, நயனா, பிபின் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பாரிஸ் கஃபே திரைப்படத்தை சராஜ் சீலன் எழுதி இயக்கியுள்ளார். கே இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு சதீஷ் ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேசிய விருது வென்ற வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை அனுமோல், "நான் நடிக்கும் படங்கள் சமுதாயத்திற்கு தேவையான கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பேன். இயக்குநரிடம் பேசும் போது ஒரு நம்பிக்கை இருந்தது, அதனால் தான் இந்தப் படத்தில் நான் நடித்தேன்.
இந்தப் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் எல்லோரடனும் நடித்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. கே இசையமைப்பாளர் அவருடைய தமிழ் பாட்டை விட மலையாள பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்.
குரு சோமசுந்தரம் கூட நடித்தது சந்தோஷமா இருந்தது. எனக்கு அவர் மீது கோபம் நான் அழகா இல்ல என்ன விட வேற ஒரு ஹீரோயின் அழகா இருக்கங்கன்னு என்கிட்டயே சொல்றாரு இப்ப கூட அவர் கிட்ட சண்டை போட்டேன், ஆனால் அந்த சண்டை அன்பான சண்டைதான். இவர் மீது எனக்கு அதிக மரியாதை இருக்கு. எல்லோரிடமும் ஒரே மாதிரி தான் பழகுவார் . இந்தப் படத்தில் நடித்தது சந்தோஷமாக இருக்கு," என்றார்.