பாரிஸ் ஒலிம்பிக் 2024

ஒலிம்பிக் ஸ்டீபிள் சேஸ் - இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரரானார் அவிநாஷ் சாப்லே!

இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்லே இலக்கை எட்டி 5 வது இடத்தைப் பிடித்தார்.இறுதிசுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவினாஷ் சாப்லே பெற்றுள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்திய வீரர்கள் தத்தமது திறமையை வெளிப்படுத்தி வெற்றியை நோக்கி முன்னேறி வருகின்றனர். அந்த வகையில், இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்லே [Avinash Sable] 3000 மீ ஸ்டீப்பில் சேஸ் போட்டியில் 8:15.43 நிமிடங்களில் இலக்கை எட்டி 5 வது இடத்தைப் பிடித்தார்.

இதன்மூலம் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு நடக்க உள்ள இறுதிப்போட்டிக்கு அவினாஷ் தகுதி பெற்றுள்ளார்.

 3000 மீ ஸ்டீப்பில் சேஸ் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவினாஷ் சாப்லே பெற்றுள்ளார்.   

SCROLL FOR NEXT