கோவாக்சின் 
செய்திகள்

கோவாக்சின் அங்கீகாரம் எப்போது?- சர்வதேச பட்டியலில் இடம் பிடிக்க தீவிரம்

சர்வதேச பயண பட்டியலில் இடம் பிடிக்க கோவாக்சின் தடுப்பூசி நிறுவனமான பாரத் பயோடெக் தீவிரமான முயற்சியில் இறங்கியுள்ளது.

மாலை மலர்

பாரத் பயோடெக் நிறுவனம், தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய கோவேக்சின் தடுப்பூசிக்கு இதுவரை உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைக்கவில்லை. பன்னாட்டு பயணங்களுக்கு அனுமதிக்கப்படும். தடுப்பூசி பட்டியலிலும் கோவேக்சின் இடம் பெறவில்லை.

இந்த நிலையில், கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கோரி, உலக சுகாதார நிறுவனத்திடம் விண்ணப்பித்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் வர்த்தகத் துறை தலைவர் எல்லா கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் மூன்றாவது அல்லது நான்காவது காலாண்டிற்குள், உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைத்து விடும் என்று கூறியுள்ள எல்லா, இத்தகைய அங்கீகாரம் உடனுக்குடன் கிடைக்காது என்கிறார்.அடுத்த சில மாதங்களுக்குள் உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைக்கும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பாரத் பயொடேக்கின் பல்வேறு இதர தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் அளித்திருப்பதை சுட்டிக் காட்டிய எல்லா, இந்த நடைமுறை பற்றி தங்களுக்கு நல்ல அனுபவம் உள்ளதாக சொல்கிறார். ஏப்ரல் 19ல் பாரத் பயொடெக் அளித்த விண்ணப்பம் தொடர்பாக, மே 18ம் தேதி, சில கூடுதல் தகவல்களை கேட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கோவீஷீல்டு தடுப்பூசிக்கு 130 நாடுகள் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் உள்ளதால், அதை செலுத்திக் கொண்டவர்களுக்கு இந்த தடை இல்லை. கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைத்தால் தான் இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு செல்ல, கோவேக்சின் தடுப்பூசிகளை செலுத்துக் கொண்டவர்களுக்கு அனுமதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.